விம்பிள்டன் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் அரையிறுதிப் போட்டிகள் நேற்று நடந்தது. முதல் அரையிறுதிப்போட்டியில் செக் குடியரசின் பெத்ரா குவித் தோவா, சக நாட்டு வீராங்கனை சபரோவாவுடன் மோதினார். இந்தப்போட்டியில் 7-6(8), 6-1 என நேர் செட்களில் வென்று பைன லுக்கு முன்னேறினார் குவித் தோவா.இரண்டாவது அரையிறுதிப்போட்டியில் ரொமானியாவின் சிமோனா ஹாலேப்புடன், கனடாவின் ஏவ்ஜெனி புச்சார்டு மோதினார். 2 ஆண்டுகளுக்கு முன்னர் விம்பிள்டன் ஜூனியர் சாம்பியன் பட்டம் வென்றிருந்த புச்சார்டின் ஆட்டம் இந்தப்போட்டியில் அனல் பறக்கும் விதமாக இருந்தது. முதல் செட்டில் இருவரும் சிறப்பாக விளையாடி தங்களது கேம்களை தக்க வைத்துக் கொண்டதால், இந்த செட்டை பிரேக்கர் வரை சென்றது. இதில் வெற்றி பெற்ற புச்சார்டு, அடுத்த செட்டில் ஹாலேப்பின் சர்வீஸ்களை எளிதாக முறியடித்தார். இதன் மூலம் 7-6 (5), 6-2 என நேர் செட்களில் வெற்றி பெற்று முன்னேறினார் புச்சார்டு. நாளை நடைபெறும் பைனலில் குவித்தோவை எதிர்கொள்கிறார் புச்சார்டு.ஆடவர் ஒற்றையர் அரையிறுதிப்போட்டிகள் இன்று மாலை நடக்கிறது. முதல் போட்டியில் நோவாக் ஜோகோவிச், டிமிட்ரோவை எதிர்த்து விளையாடுகிறார். மற்றொரு அரையிறுதில் சுவிஸ் வீரர் ரோஜர் பெடரரர், கனடாவின் ரோனிக்கை எதிர்கொள்கிறார். ஆடவர் இரட்டையர் பிரிவில் இன்று மாலை நடைபெறும் அரையிறுதிப்போட்டியில் இந்தியாவின் லியாண்டர் பயஸ்&ராடெக் ஸ்டெபானெக் ஜோடி, போஸ்பிசில்-மாஹூத் இணையை எதிர்கொள்ள உள்ளது.