Untitled Document
Tamil Month Rasi Palan Maasi 2013
2014
03
Jul
ஆசிரியர் பயிற்சி மாணவர் சேர்க்கை கவுன்சலிங் 7ம் தேதி தொடக்கம்


சென்னை: ஆசிரியர் பயிற்சி பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர்களை சேர்ப்பதற்கான கவுன்சலிங் 7ம் தேதி தொடங்கி 15ம் தேதி வரை நடத்த அரசு  உத்தரவிட்டுள்ளது.  அரசு ஆசிரியர் பயிற்சி பள்ளிகள் 29, அரசு மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் 9, அரசு நிதியுதவி பெறும் ஆசிரியர் பயிற்சி பள்ளிகள் 42  இயங்கி வருகின்றன. தனியார் பள்ளிகள் 400 உள்ளன.  அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் இந்த ஆண்டுக்கு மொத்தம் 2800 இடங்கள்  ஒதுக்கப்பட்டுள்ளன. தனியார் பள்ளிகளில் 10000 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு நிலவரப்படி மேற்கண்ட பள்ளிகளில் மொத்தம் 17000 இடங்கள்  இருந்தன. இந்த ஆண்டில் மேற்கண்ட பள்ளிகளில் மாணவ மாணவியரை சேர்ப்பதற்கான அறிவிப்பு கடந்த மே மாதம் வெளியிடப்பட்டது.  மே 14ம் தேதி முதல்  சேர்க்கை விண்ணப்பங்கள் வழங்கப்பட்டது. ஜூன் 2ம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டது. பின்னர் அந்த தேதி ஜூன் 9ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.   மொத்தம் 12800 இடங்கள் இருந்தும்  4520 பேர்தான் விண்ணப்பித்துள்ளனர். மாணவர் சேர்க்கை கவுன்சலிங்  அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்  அலுவலகங்களில் 7ம் தேதி முதல் 15ம் தேதி வரை ஆன்லைன் மூலம் நடக்கிறது. கவுன்சலிங் குறித்த விவரங்கள் ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி  இயக்கக இணைய தளத்தில் வெளியிடப்படும்.

மேலும் சில
கருத்துகளை தெரிவிக்க

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 

 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,



Follow Me
Health Corner: Current Health News, latest medical news, health news, medical news, medical dictionary, most popular news, hospital, diets, drugs, dental care, bird flu, cancer, mens health, womens health, mental health, health articles, diabetes, medical conditions, health animation, video, Free Online Medical journals, alternative medicine - Dinakaran
 
Advertisement
Advertisement