நஸ்ரியா வேடத்துக்கு ஆள் தேடும் பட குழு
சென்னை: நஸ்ரியா வேடத்தில் நடிக்க ஹீரோயின் தேடுகிறது பட குழு.தமிழில் ‘நேரம், ‘நய்யாண்டி, ‘ராஜா ராணி போன்ற படங்களில் நடித்த நஸ்ரியா நாசிம் விரைவில் மல்லுவுட் ஹீரோ பஹத் பாசிலை மணக்க உள்ளார். இவர்கள் இருவரும் சமீபத்தில் ‘பெங்களூர் டேஸ் என்ற மலையாள படத்தில் இணைந்து நடித்தனர். அண்ணன் தங்கையாக இவர்கள் நடித்திருந்தனர். இப்படம் விரைவில் தமிழ், தெலுங்கில் ரீமேக் ஆக உள்ளது. பிவிபி சினிமா பட நிறுவனம் தயாரிக்கிறது. மலையாளத்தில் நடித்த துல்கர் சல்மான், பஹத் பாசில், நிவின் ஆகிய 3 ஹீரோக்களுமே தமிழ் ரீமேக்கிலும் நடிக்க உள்ளனர். நஸ்ரியா வேடத்துக்கு சமந்தாவிடம் கால்ஷீட் கேட்கப்பட்டுள்ளது. ஆனால் அவர் அதை உறுதி செய்யவில்லை. இதையடுத்து நஸ்ரியா வேடத்துக்கு பொருத்தமான நடிகையை தேடும் பணியில் பட குழு மும்முரமாக ஈடுபட்டுள்ளது.