Untitled Document
Tamil Month Rasi Palan Maasi 2013
2014
02
Jul
மேட்டூர் நீர் மட்டம் 47 அடியாக உயர்வு


மேட்டூர்:கர்நாடக மாநிலத்தில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் தென்மேற்கு பருவ மழை தீவிரமடைந்துள்ளது. இதனால் அங்குள்ள அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. கபினி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ள நிலையில், அணை நிரம்பும் நிலையை எட்டியதால் கூடுதல் நீர் திறக்கப்பட்டுள்ளது.மேலும் தமிழக&கர்நாடக எல்லைப்பகுதியான பாலாற்றில் இருந்து ஒகேனக்கல் வரை கடந்த 2 நாட்களாக பரவலாக நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனால் மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்து வருகிறது. நேற்று 6282 கனஅடி நீர் வந்து கொண்டிருந்த நிலையில், இன்று காலை 8 மணி நிலவரப்படி நீர் வரத்து வினாடிக்கு 8401 கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 2001 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. நீர் மட்டம் 46.94 அடியாகவும், நீர் இருப்பு 15.93 டிஎம்சியாகவும் உள்ளது. வரும் நாட்களில் நீர் வரத்து அதிகரித்தால் மேட்டூர் அணை வேகமாக நிரம்பும். நீர் மட்டம் 90 அடியை தாண்டினால் டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படும்.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 2ம் தேதி மேட்டூர் அணையின் நீர் மட்டம் 109 அடியாக இருந்த போது டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறக¢கப்பட்டது. அப்போது அணைக¢கு வினாடிக¢கு 40,300 கனஅடி தண்ணீர் வந்துகொண்டிருந்தது. நடப்பு ஆண்டிலும் அதேபோல் ஆகஸ்ட் மாதத்தில் அணை திறக்க வாய்ப்பு உள்ளதாக விவசாயிகள் நம்பிக்கையுடன் உள்ளனர். இதனிடையே ஒகேனக்கல்லில் நேற்றைவிட நீர் வரத்து குறைந்துள்ளது. தமிழகத்திற்கு வரும் நீர் அளவிடப்படும் இடமான பிலிகுண்டுவிலுவில் நேற்று 10 ஆயிரம் கனஅடி நீர் வந்துகொண்டிருந்தது. ஆனால் இன்று காலை 2ஆயிரம் கனஅடி நீர் குறைந்து 8 ஆயிரம் கனஅடி நீர் வந்துகொண்டிருந்தது.

மேலும் சில
கருத்துகளை தெரிவிக்க

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 

 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,



Follow Me
Health Corner: Current Health News, latest medical news, health news, medical news, medical dictionary, most popular news, hospital, diets, drugs, dental care, bird flu, cancer, mens health, womens health, mental health, health articles, diabetes, medical conditions, health animation, video, Free Online Medical journals, alternative medicine - Dinakaran
 
Advertisement
Advertisement