தடைகளை மீறி வருகிறார் அஞ்சலி
சென்னை: தடைகளை மீறி தமிழில் நாளை முதல் நடிக்க வருகிறார் அஞ்சலி.களஞ்சியம் இயக்கத்தில் 'ஊர் சுற்றி புராணம்' படத்தில் நடித்து வந்தார் அஞ்சலி. அப்போது சித்தியும் களஞ்சியமும் சேர்ந்து தன்னை கொடுமை படுத்துவதாக கூறி தலைமறைவானார். 15 நாட்களுக்கு பிறகு போலீசார் முன் ஆஜர் ஆனார். பிறகு களஞ்சியம் படத்தில் நடிக்க முடியாது என பின்வாங்கினார். இதற்கிடையில் சுராஜ் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்கும் படத்துக்காக அஞ்சலி ஒப்பந்தமாகியுள்ளார். தனது படத்தில¢ நடித்த பின்பே வேறு தமிழ் படத்தில் நடிக்க வேண்டும் என களஞ்சியம் கூறுகிறார். இது குறித்து டைரக்டர் சங்கத்தில் புகார் தெரிவித்து, அவர்களும் அஞ்சலிக்கு நோட்டீஸ் அனுப்பினர். ஆனால் அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் நாளை முதல் சுராஜ் பட ஷூட்டிங்கில் பங்கேற்க உள்ளாராம் அஞ்சலி.