மாமல்லபுரம் அரிமா சங்க நிர்வாகிகள் தேர்வு
திருப்போரூர்மாமல்லபுரம் அரிமா சங்க புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா நடந்தது.இதற்கு தலைவர் வேலுச்சாமி தலைமை வகித்தார். வட்டார தலைவர் பாண்டியன், நகர பொருளாளர் ராமச்சந்திரன் முன்னிலை வகித்தனர். சங்க செயலாளர் அப்துல் ஹமீது வரவேற்றார். இதில், மாமல்லபுரம் அரிமா சங்க புதிய தலைவராக சாந்தகுமார் தேர்வு செய்யப்பட்டார். செயலாளராக ஓம்பிரகாஷ் ரத்தோர், பொருளாளராக கிரிதாரிலால் தேர்வானார்கள். அரிமா சங்கத்தின் மாவட்ட துணை ஆளுனர் உதயசங்கர், பதவிபிரமாணம் செய்து வைத்தார்.இவ்விழாவில், ஒரு பெண்ணுக்கு தையல் எந்திரம், 10ம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவிக்கு கல்வி உதவித்தொகை வழங்கினர்.