Untitled Document
Tamil Month Rasi Palan Maasi 2013
2014
01
Jul
ஐடிஐ டிப்ளமோ தகுதிக்கு எல்லை பாதுகாப்பு படையில் 496 பணியிடங்கள்


எல்லை பாதுகாப்பு படையில் ஏஎஸ்ஐ (ஆர்எம்), ஹெட்கான்ஸ்டபிள் (ஆர்ஒ) மற்றும் ஹெட்கான்ஸ்டபிள் (பிட்டர்) என 496 காலி பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியின் விவரம்:

1. அசிஸ்டென்ட் சப்-இன்ஸ்பெக்டர் (ஆர்.எம்):

68 இடங்கள் (பொது - 37, ஒபிசி - 17, எஸ்சி - 10, எஸ்டி - 4).

தகுதி:

ரேடியோ மற்றும் டி.வி., டெக்னாலஜி அல்லது எலக்ட்ரானிக்ஸ் அல்லது டெலி கம்யூனிகேசன் அல்லது கம்ப்யூட்டர் அல்லது எலக்ட்ரிக்கல் அல்லது மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பிரிவில் 3 வருட டிப்ளமோ அல்லது இயற்பியல், வேதியியல், கணித பாடங்களில் 50 சதவீத மதிப்பெண்களுடன் பிளஸ் 2வில் தேர்ச்சி.

2. ஹெட்கான்ஸ்டபிள் (ஆர்.ஒ):

417 இடங்கள் (பொது - 189, ஒபிசி - 112, எஸ்சி - 73, எஸ்டி - 43).

தகுதி:

10ம் வகுப்பு தேர்ச்சியுடன் ரேடியோ மற்றும் டி.வி.,/ எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் 2 வருட ஐடிஐ அல்லது இயற்பியல், வேதியியல், கணித பாடங்களில் பிளஸ் 2 தேர்ச்சி.

3. ஹெட்கான்ஸ்டபிள் (பிட்டர்):

11 இடங்கள் (பொது - 8, ஒபிசி - 2, எஸ்சி - 1).

தகுதி:

10ம் வகுப்பு தேர்ச்சியுடன் இன்ஜின் பிட்டர்/ டீசல் மெக்கானிக்/ ஆட்டோமொபைல்/ மோட்டார் மெக்கானிக் பிரிவில் 2 வருட ஐடிஐ அல்லது இயற்பியல், வேதியியல், கணித பாடங்களில் பிளஸ் 2 தேர்ச்சி.

வயது வரம்பு:

7.7.2025 தேதிப்படி பொதுப்பிரிவினருக்கு 18ல் இருந்து 25க்குள்ளும், ஓபிசியினருக்கு 18ல் இருந்து 28க்குள்ளும், எஸ்சி., எஸ்டி பிரிவினருக்கு 18ல் இருந்து 30க்குள் இருக்க வேண்டும்.

உடல் தகுதிகள்:

ஆண்கள் - 168 செமீ, மார்பளவு - 80 செமீ, (5 செமீ விரிவடைய வேண்டும்), எடை - உயரத்திற்கேற்ற எடை.

எழுத்துத்தேர்வு, உடல்தகுதி தேர்வு, மருத்துவ தகுதியின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம்:

ரூ.50. இதை DIGCOMMANDANT என்ற பெயருக்கு பெங்களூரில் மாற்றத்தக்க வகையில் டிடி அல்லது போஸ்டல் ஆர்டர் எடுக்க வேண்டும்.

மாதிரி விண்ணப்பம் மற்றும் கூடுதல் விவரங்களுக்கு www.bsf.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி:

THE DIGCOMMANDANT,
BFS STS YELAHANKA,
BANGALORE (KARNATAKA),
PIN: 560 004.


விண்ணப்பிக்க கடைசி நாள்: 7.7.2014.

மேலும் சில
கருத்துகளை தெரிவிக்க

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 

 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,



Follow Me
Health Corner: Current Health News, latest medical news, health news, medical news, medical dictionary, most popular news, hospital, diets, drugs, dental care, bird flu, cancer, mens health, womens health, mental health, health articles, diabetes, medical conditions, health animation, video, Free Online Medical journals, alternative medicine - Dinakaran
 
Advertisement
Advertisement