இந்திய
விண்வெளி ஆராய்ச்சி கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் கர்நாடக மாநிலம்,
ஹசனில் உள்ள தலைமை கட்டுப்பாட்டு நிலையத்தில் ஏற்பட்டுள்ள காலியிடங்களுக்கு
தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.
எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேசன் இன்ஜினியரிங் பிரிவில் 60 சதவீத தேர்ச்சியுடன் டிப்ளமோ.
சம்பளம்:
ரூ.9,300 - 34,800 மற்றும் தர ஊதியம் ரூ.4,600.
2. லைபரரி அசிஸ்டென்ட் - ஏ:
1 இடம் (பொது)
தகுதி:
முதல்
வகுப்பில் ஏதேனும் ஓரு இளங்கலை பட்டப்படிப்பில் தேர்ச்சியுடன் லைப்ரரி
சயின்ஸ்/ லைப்ரரி மற்றும் இன்பர்மேசன் சயின்ஸ் பிரிவில் முதல் வகுப்பில்
முதுகலை பட்டப்படிப்பு. சம்பளம்:
ரூ.9,300 - 34,800 மற்றும் தர ஊதியம் ரூ.4,600.
3. ஜூனியர் இந்தி டிரான்ஸ்லேட்டர்:
2 இடங்கள் (ஓபிசி).
தகுதி:
ஆங்கிலம்/
இந்தியை கட்டாய/ விருப்ப பாடமாகக் கொண்டு இந்தி/ ஆங்கிலத்தில் எம்ஏ
முடித்திருக்க வேண்டும் அல்லது இந்தி மற்றும் ஆங்கிலத்தை கட்டாய/ விருப்ப
பாடமாகக் கொண்டு ஏதாவது பிரிவில் எம்ஏ முடித்திருக்க வேண்டும் அல்லது இந்தி
மற்றும் ஆங்கிலத்தை கட்டாய/ விருப்ப பாடமாகக் கொண்டு இளங்கலை
பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். அத்துடன் இந்தியிலிருந்து ஆங்கிலம்
மற்றும் ஆங்கிலத்திலிருந்து இந்தியில் மொழி பெயர்ப்பில் டிப்ளமோ
முடித்திருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ.9,300 - 34,800 மற்றும் தர ஊதியம் ரூ.4,200.
வயது வரம்பு:
அனைத்து
பணிகளுக்கும் வயது வரம்பு 4.7.2025 தேதிப்படி 18 லிருந்து 35க்குள் இருக்க
வேண்டும். எஸ்சி., எஸ்டியினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசியினருக்கு 3
ஆண்டுகளும், முன்னாள் ராணுவத்தினர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு
அரசியல் சட்டப்படியும் தளர்வு அளிக்கப்படும். நேர்முகத்தேர்வு நடத்தப்பட்டு
தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.
www.isro.gov.in
என்ற இணையதளத்திலிருந்து மாதிரி விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து
விவரங்களை பூர்த்தி செய்து சான்றிதழ்களில் நகல்களை இணைத்து அனுப்ப
வேண்டும். விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி:
The Senior Administrative Officer, Master Control Facility, Salagame Road, P.B.No:66, HASSAN 573 202, Karnataka.