இந்திய
வனப்பணி பிரிவில் அதிகாரி பணியில் சேருவதற்கான தேர்வை மத்திய அரசுப்
பணியாளர் தேர்வாணையம் 24.8.2025 அன்று நடத்துகிறது. தகுதியானவர்கள்
விண்ணப்பிக்கலாம்.
தேர்வு:
Indian Forest Service Examination, 2014.
வயது:
1.8.2025
தேதிப்படி 21 முதல் 32க்குள். எஸ்சி., எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும்,
ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகள் மற்றும் முன்னாள்
ராணுவத்தினருக்கு சட்டப்படியும் தளர்வு அளிக்கப்படும்.
தகுதி:
Animal
Husbandry - Veterinary Science, Botany, Chemistry, Geology,
Mathematics, Physics, Statistics, Zoology, Agirculture,Forestry,
Engineering ஆகிய பாடங்களில் பட்டப்படிப்பு தேர்ச்சி. இறுதியாண்டு
தேர்வு எழுதுபவர்களும் விண்ணப்பிக்கலாம். முதல்நிலைத் தேர்வு, முதன்மைத்
தேர்வு, நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.
எழுத்துத்தேர்வு சென்னை, மதுரை, கோவை, புதுச்சேரி, திருவனந்தபுரம்,
கொச்சி, கோழிக்கோடு, பெங்களூர், ஐதராபாத் உட்பட மொத்தம் 59 இடங்களில்
நடைபெறும்.
விண்ணப்ப கட்டணம்:
ரூ.100.
(பெண்கள், எஸ்சி., எஸ்டி, மாற்றுத்திறனாளிகளுக்கு விண்ணப்ப கட்டணம்
கிடையாது.) இதை உரிய செலான் படிவத்துடன் ஸ்டேட் வங்கியின் ஏதாவது ஒரு
கிளையில் செலான் மூலம் பணமாக செலுத்தவும். ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா/
ஸ்டேட் பாங்க் ஆப் பைகானீர் மற்றும் ஜெய்ப்பூர்/ ஸ்டேட் பாங்க் ஆப்
ஐதராபாத்/ ஸ்டேட் பாங்க் ஆப் மைசூர்/ ஸ்டேட் பாங்க் ஆப் பாட்டியாலா/ ஸ்டேட்
பாங்க் ஆப் திருவாங்கூர் ஆகிய ஏதாவது ஒரு வங்கியில் நெட் பேங்கிங்
முறையில் செலுத்தலாம் அல்லது விசா/ மாஸ்டர்/ கிரெடிட்/ டெபிட் கார்டு
முறையிலும் செலுத்தலாம்.
விண்ணப்பதாரர்கள் www.upsconline.nic.in என்ற இணையதளத்தில் ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பம் அனுப்ப கடைசி நாள்: 30.6.2014.