'ஹேப்பி பர்த்டே சொல்ல வந்தார்' டாக்டர் காதலியின் வீட்டில் வங்கி அதிகாரி தற்கொலை
கோவை:கோவையில் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பால் மனமுடைந்த காதலன், தன் டாக்டர் காதலியின் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண் டார். கோவை சிட்கோ அறிஞர் அண்ணா காலனியை சேர்ந்தவர் திருநாவுக்கரசு மகள் நிர்மலா(25). பல் டாக்டர். நீலகிரி மாவட்டம் ஊட்டி பகுதி கேத்தியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி(25). இவர் சென்னையிலுள்ள ஒரு தனியார் வங்கியில் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இவர்களிவரும் சிறுவயதில் இருந்தே ஒரே பள்ளியில் படித்ததால் காதலித்து வந்தனர். இவர்களின் காதல் விவகாரத்திற்கு கிருஷ்ணமூர்த்தியின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
பெற்றோர் எதிர்த் தாலும், கிருஷ்ணமூர்த்தி அடிக்கடி சென்னையில் இருந்து கோவைக்கு வந்து நிர்மலாவை அவரது வீட்டில் சந்தித்து விட்டு செல்வார். நேற்று நிர்மலாவுக்கு பிறந்தநாள். அவருக்கு பரிசு வழங்க கிருஷ்ணமூர்த்தி சனிக்கிழமை கோவைக்கு வந்தார். சிட்கோவிலுள்ள காதலியின் வீட்டில் சென்று தங்கினார். நேற்று முன்தினம் காலை நீண்ட நேரமாக கிருஷ்ணமூர்த்தி வெளியே வராததால் சந்தேகமடைந்த நிர்மலா மற்றும் அவரது பெற்றோர் சென்று பார்த்த போது கிருஷ்ணமூர்த்தி அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்தது தெரியவந்தது.
இதுகுறித்து போத்தனூர் போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து நிர்மலா அளித்த புகாரின் பேரில் போத்தனூர் போலீசார் வழக்குபதிந்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரிக்கின்றார்.