திருநள்ளாறு பெருமாள் கோயிலுக்கு சூரிய பிரபை சேஷ வாகனங்கள்
காரைக்கால்:புதுவை மாநிலம் காரைக் கால் அடுத்த திருநள்ளாறு சனி பகவான் கோயில் நளன் தீர்த்தத்தையொட்டி உள்ளது நளநாராயண பெருமாள் கோயில். சனி பகவான் கோயிலுக்கு தோஷ நிவர்த்திக்காக வரும் பக்தர்கள் நள தீர்த்தத்தில் புனித நீராடி நள நாராயண பெருமாளையும் வழிபட்டு செல்வர்.
இந்த கோயிலில் சாமி வீதியுலா மற்றும் முக்கிய நிகழ்ச்சிகளின் போது, காரைக்கால் கைலாசநாதர் கோயிலில் உள்ள சூரிய பிறை மற்றும் சேஷ வாகனத்தை தான் பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில் நள நாராயண பெருமாளுக்கென்று ரூ.1.5 லட்சம் செலவில் புதிதாக வடிவமைக்கப்பட்ட இரு வாகனங்களை நேற்று கோயிலுக்கு ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடந்தது. எம்எல்ஏ சிவா தலைமை வகித்தார். தொடர்ந்து இரு வாகனங்களுக்கும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு கோயில் பயன்பாட்டுக்கு ஒப்படைக்கப்ணீபட்டன.
கோயில் நிர்வாக அதிகாரி ராஜராஜன் வீராசாமி கூறுகையில், மரத்தில் செய்தால் எடை அதிகமாகவும், அடிக்கடி வர்ணம் பூசும் சிரமமும் உருவாகும் என்பதால் பைபரால் இரு வாகனங்களும் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டுள்ளன. பல ஆண்டுகளுக்கு வர்ணம் அப்படியே இருக்கும் என்றார்.