திருவள்ளூரில் கி3.47 கோடியில் அடிப்படை வசதி
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் ரூ.3.47 கோடி நிதியில் அடிப்படை வசதிகள் செய்வது என்று மாவட்ட ஊராட்சிக் குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. திருவள்ளூர் மாவட்ட ஊராட்சிக் குழு கூட்டம், கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்ட ஊராட்சிக் குழு தலைவர் பா.ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். கூட்டத்தில், மாவட்ட ஊராட்சிக் குழுவிற்கு ரூ.3.47 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இந்நிதியின் மூலம், திருவள்ளூர் மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றுவது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில், மாவட்ட கவுன்சிலர்கள் டி.டி.சீனிவாசன், கோ.குமார், பி.பாசூரான், பி.வெங்கட்ரமணா, சாந்தி ஜனார்த்தனம், செல்வகுமாரி அண்ணாதுரை, கோவி.நாராயண மூர்த்தி, சுந்தரமூர்த்தி, ஸ்ரீதர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.'