படமாக்கிய காட்சிகளை பார்த்துவிட்டு இசைக்கு ஓகே சொன்ன இளையராஜா
சென்னை: எந்தவொரு படத்துக்கு ஷூட்டிங் செல்வதாக இருந்தாலும் நடிகர், நடிகை முதல் டெக்னீஷியன்வரை எல்லோரையும் ஒப்பந்தம் செய்துவிட்டுத்தான் ஷூட்டிங் செல்வார்கள். ‘கிடா பூசாரி மகுடி படத்துக்கு இசை அமைப்பாளரை ஒப்பந்தம் செய்யாமல் ஷூட்டிங் நடத்தினார் இயக்குனர் ஜெயகுமார்.ஜெ. இதுபற்றி அவர் கூறியதாவது:நான் படம் இயக்கினால் அதற்கு இளையராஜாவைத்தான் இசை அமைப்பாளராக ஒப்பந்தம் செய்ய வேண்டும் என்று எண்ணி இருந்தேன். அப்படத்தின் ஸ்கிரிப்ட் ரெடியானபிறகு இசை அமைப்பாளர் தவிர மற்ற அனைவரையும் தேர்வு செய்தேன். உடனடியாக ஷூட்டிங் கிளம்பி காட்சிகளை படமாக்கினேன். பெரும்பகுதி ஷூட்டிங் நடத்தியபிறகு இளையராஜாவை சந்தித்து அக்காட்சிகளை திரையிட்டு காட்டி படத்துக்கு இசை அமைக்க கேட்டேன். காட்சிகளை பார்த்துவிட்டு இசை அமைக்க ஒப்புக்கொண்டார். திருமணத்துக்கு முன்பு ஆணும் பெண்ணும் பழகுவது மட்டும் காதல் அல்ல திருமணத்துக்கு பிறகு உருவாகும் ரத்த பந்தத்தில்தான் உண்மையான காதல் இருக்கிறது என்பதை சொல்லும் ஸ்கிரிப்ட். தமிழ், ராம்தேவ், நட்சத்திரா, சிங்கம் புலி, ஸ்ரீனிவாசன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். த.தமிழ்மணி தயாரிப்பு. ரவி சீனிவாசன் தயாரிப்பு.