கோப்பையை வெல்லும் வரை ‘அந்தப்புரங்களுக்கு’ தடை
உலக கோப்பை கால்பந்து போட்டியில் ஒரு வழியாக முதல் சுற்று ஆட்டங்கள் முடிவுக்கு வந்து விட்டன. ஆனால் ஒவ்வொரு அணியின் வெற்றி, தோல்வியின் பின்னணியில் பல்வேறு காரணங்கள் கூறப்படுகிறது. அதில் சில அணிகளில் வீரர்களுக்கு மனைவி அல்லது கேர்ள் பிரண்டுகளுடன் உறவு வைத்துக் கொள்ள தடை விதிக்கப்பட்டதும், அனுமதிக்கப்பட்டதும் வெற்றிக்கான காரணிகளாக சொல்லப்படுகிறது.பிரேசில், மெக்சிக்கோ அணி வீரர்களுக்கு உலக கோப்பை போட்டிகள் முடியும் வரை இரவு நேர உல்லாசங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதில் மெக்சிக்கோ வீரர்களை மிக உண்ணிப்பாக கண்காணிக்கும் பெரும் பொறுப் பை அந்நாட்டு அணியின் பயிற்சியாளர் வசமே வழங்கப்பட்டுள்ளதாம். இதே நிலை தான் பிரேசில் அணியிலும். கோப்பையை வெல்லும் வரை பெட்ரூம் சிந்தனையே வரக்கூடாது என வீரர்களுக்கு எழுதப்படாத உத்தரவு. டி பிரிவில் முதலி டம் பிடித்துள்ள கோஸ்டாரிக்கா ஒரு வழியாக நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. இந்த அணி வீரர்களுக்கு முதல் சுற்று ஆட்டம் முடியும் வரையிலும் பெட் ரூமில் இடமில்லையாம். இரண்டாம் சுற்றுக்கு பின்னர் வேண்டுமானால் விதிகள் தளர்த்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளதாம். ‘ரொமான்ஸ் பிரி’ அணியாக இருப்பது பிரான்ஸ் தான். மனைவி யாக இருந் தாலும் சரி அல்லது நண்பிகளாக இருந்த £லும் சரி. எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் அதி லும் ‘கட்டுப்பாடு’ முக்கியம் என எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளனர். நைஜீரியா அணியில் திருமணமான வீரர்களுக்கு இந்த விஷயத்தில் எந்த தடையும் இல்லை. ஆனால் நண்பிகளை வைத்துள்ள வீரர்களுக்கு அனுமதி கிடையாது.ஜெர்மன் அணி வீரர்களுக்கு பெட்ரூம் கட்டுப்பாடு விதிக்கப்பட்டது தான் தொடர் வெற்றிக்கு காரண மாம். இதற்கு அந்த அணியின் நம்பிக்கை நட்சத்திரத்தை முன்னுதாரணமாக காட்டியுள்ளனர். போர்ச்சுகலுக்கு எதிரான ஆட்டத்தில் அவர் ஹாட்ரிக் அடித்ததற்கு காரணமே ஆட்டத்தின் முந்தைய நாள் இரவு மனைவி லிசாவுடன் தங்க அனுமதி மறுக்கப்பட்டது தான் காரணமாம்.