Untitled Document
Tamil Month Rasi Palan Maasi 2013
2014
27
Jun
ஒதுங்கி இருக்கும் சீனியர் நடிகை

tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper

சென்னை: வருடக் கணக்கில் நடிக்காமல் ஒதுங்கி இருந்த கே.ஆர்.விஜயா தற்போது ‘தனுஷ் 5ம் வகுப்பு என்ற படத்தில் நடித்திருக்கிறார். மீண்டும் நடித்திருப்பதுபற்றி அவரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:பெரிய நடிகர்களுடன் நடித்துள்ளேன். அதற்கேற்ற மரியாதையை ரசிகர்கள் எனக்கு தந்திருக்கிறார்கள். அந்த கவுரவத்தை காப்பாற்றிக்கொள்ளவே நடிப்பதை குறைத்துக்கொண்டேன். நிறைய படங்கள் வந்தாலும் ஏற்க மறுத்துவிடுகிறேன். வாய்ப்பு வருகிறது என்பதற்காக எல்லாவற்றையும் ஏற்று நடித்து இருக்கும் மரியாதையை குறைத்துக்கொள்ள விரும்பவில்லை. தனுஷ் 5ம் வகுப்பு படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதற்கு காரணம் ஒரு சிறுவனின் தன்னம்பிக்கையை மையமாக வைத்து உருவான கதை. அவனது குடும்பத்தில் பெற்றோர் எப்போதும் சண்டையிட்டுக் கொள்கிறார்கள். அதை எண்ணி மனம் நோகிறான் சிறுவன். நான் தரும் ஒரு பரிசு அவனுக்கு தன்னம்பிக்கையை வரவழைக்கிறது. அது அவனது வாழ்க்கையை எப்படி மாற்றி அமைக்கிறது என்று கதை செல்கிறது. நல்ல வேடமாக இருந்ததால் ஏற்றுக்கொண்டேன். இப்படத்தை கதாக திருமாவளவன் இயக்கி உள்ளார். இளங்கோ தயாரித்திருக்கிறார். நடித்ததுபோதும் என்று ஒதுங்கி இருக்கிறேன்.

கருத்துகளை தெரிவிக்க

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 

 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,



Follow Me
Health Corner: Current Health News, latest medical news, health news, medical news, medical dictionary, most popular news, hospital, diets, drugs, dental care, bird flu, cancer, mens health, womens health, mental health, health articles, diabetes, medical conditions, health animation, video, Free Online Medical journals, alternative medicine - Dinakaran
 
Advertisement
Advertisement