குடித்து விட்டு டார்ச்சர் செய்கிறார் மாஜி கணவர் மீது ஸ்ருதி புகார்
சென்னை: குடித்துவிட்டுவந்து மாஜி கணவர் டார்ச்சர் செய்வதாக புகார் கூறி உள்ளார் ஸ்ருதி.‘கல்கி படத்தில் நடித்தவர் ஸ்ருதி. ஏராளமான கன்னட படங்களில் நடித்துள்ளார். இவர் தனது நீண்ட நாள் நண்பர் சந்திரசூட் என்பவரை 2வதாக திருமணம் செய்துகொண்டார். இருவருக்கும் மனக்கசப்பு ஏற்பட்டு பிரிந்தனர். கடந்த வாரம் ஸ்ருதி மீது அவரது வீட்டு வேலைக்கார பெண் போலீசில் புகார் அளித்தார். ஸ்ருதி தன்னை அடித்து சித்ரவதை செய்வதாக அதில் அப்பெண் குறிப்பிட்டிருந்தார். இதை மறுத்த ஸ்ருதி, தனது மாஜிகணவர் சந்திரசூட் தூண்டுதலின் பேரிலேயே வேலைக்கார பெண் தன் மீது புகார் கொடுத்திருப்பதாக தெரிவித்தார்.இந்நிலையில் ஸ்ருதி கூறியதாவது:சந்திரசூட் நான் தங்கி இருக்கும் வீட்டுக்கு எதிரிலேயே இன்னொரு வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கி இருக்கிறார். ஒவ்வொரு நாள் இரவும் என்னை அவர் துன்புறுத்துகிறார். சில நண்பர்களை அவர் தன்னுடன் சேர்த்துக்கொண்டு குடித்து விட்டு, இரவு 12 மணிக்கு மேல் என் வீட்டு கதவை தட்டி என்னை வெளியில் வரும்படி மிரட்டுகிறார். நான் வரமறுத்தால் பத்திரிகையில் என்னைப்பற்றி தாறுமாறாக சொல்லி எனக்குள்ள நற்பெயரை கெடுத்துவிடுவேன் என்றும் மிரட்டுகிறார்.கவுரவமானவர்கள் வாழும் பகுதியில் நான் வாழ்ந்துகொண்டிருக்கிறேன். அப்பகுதியில் இருப்பவர்கள் இரவு 9 மணிக்கெல்லாம் தூங்கச் சென்றுவிடுவார்கள். அவர்களின் அமைதியை குலைக்கும் வகையிலும் சந்திரசூட் நடந்துகொள்கிறார் என்று ஸ்ருதி புகார் தெரிவித்திருக்கிறார்.