Untitled Document
Tamil Month Rasi Palan Maasi 2013
2014
26
Jun
ஆப்கானிஸ்தானில் இந்திய தூதரகத்தை தாக்கியது லஸ்கர் தீவிரவாதிகள் தான்

tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper

வாஷிங்டன்ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலை அடுத்துள்ள ஹிராத் நகரில் இந்திய தூதரகம் உள்ளது. இங்கு கடந்த மாதம் 23ம் தேதி திடீரென 4 தீவிரவாதிகள் வந்து துப்பாக்கியால் சரமாரியாக சுட்டும், வெடிகுண்டுகளை வீசியும் தாக்குதல் நடத்தினார்கள். இதில், தூதரக அலுவலகத்தின் முன்பகுதி பலத்த சேதமடைந்தது. இந்திய பாதுகாப்பு படையினரும், ஆப்கன் ராணுவத்தினரும் எதிர் தாக்குதல் நடத்தி, 4 தீவிரவாதிகளையும் சுட்டு கொன்றனர்.
இந்தியாவில் கடந்த மாதம் 26ம் தேதி நரேந்திர மோடி பிரதமராக பொறுப்பேற்றார். முன்னதாக, பதவியேற்பு நிகழ்ச்சிக்கு பாகிஸ்தான், ஆப்க£னிஸ்தான் உட்பட சார்க் மாநாட்டு தலைவர்களுக்கு அவர் அழைப்பு விடுத்திருந்தார். இதனால் ஆத்திரமடைந்த தீவிரவாதிகள், ஆப்க£னிஸ்தானில் ஹிராத்தில் உள்ள இந்திய தூதரகத்தை தாக்கியதாக தெரிய வந்தது.

இந்நிலையில், இந்த தாக்குதலை நடத்தியது, பாகிஸ்தானை மையமாக கொண்டு செயல்படும் லஸ்கர்&இ&தொய்பா தீவிரவாதிகள் என்று அமெரிக்கா தெரிவித்திருக்கிறது. பல்வேறு வெடிகுண்டு தாக்குதல்கள் மூலம் தொடர்ந்து அச்சுறுத்தி வரும் இந்த இயக்கத்தின் மீதும், அதன் தலைவர்களுக்கு எதிராகவும் மேலும் தடைகள் விதிக்கப்படுகின்றன என்று அமெரிக்க வெளியுறவு துறை அறிவித்துள்ளது. கடந்த 2001&ம் ஆண்டு உருவான லஸ்கர் தீவிரவாத இயக்கம், இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் உட்பட வெவ்வேறு நாடுகளில் ஊடுருவி, வெடிகுண்டு தாக்குதல்களை நடத்தி வருகிறது. 2008&ம் ஆண்டு மும்பையில், அந்த இயக்க தீவிரவாதிகளின் தாக்குதலில் 166 பேர் பலியானார்கள். கடந்த 2011&12ல் ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற பல்வேறு வெடிகுண்டு தாக்குதல்களுக்கும் அவர்களே காரணம் என்றும் அமெரிக்க வெளியுறவு துறை குறிப்பிட்டுள்ளது.

மேலும் சில
கருத்துகளை தெரிவிக்க

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 

 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,



Follow Me
Health Corner: Current Health News, latest medical news, health news, medical news, medical dictionary, most popular news, hospital, diets, drugs, dental care, bird flu, cancer, mens health, womens health, mental health, health articles, diabetes, medical conditions, health animation, video, Free Online Medical journals, alternative medicine - Dinakaran
 
Advertisement
Advertisement