பிரதமரான பிறகு முதல் முறையாக 29ல் சென்னை வருகிறார் மோடி
சென்னை: பிரதமர் நரேந்திர மோடி வரும் 29ம் தேதி சென்னை வருகிறார். இதையொட்டி விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் வருகிற 30ம் தேதி வெளிநாட்டு செயற்கைகோள்கள் பிஎஸ்எல்வி சி&23 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தும் நிகழ்ச்சி நடக்க உள்ளது. இதில், கலந்து கொள்வதற்காக பிரதமர் நரேந்திரமோடி 29ம் தேதி பகல் 1 மணிக்கு டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை பழைய விமான நிலையம் வருகிறார். பிரதமராக பதவியேற்ற பிறகு முதல்முறையாக அவர் தமிழகம் வருகிறார்.விமான நிலையத்திலிருந்து ஸ்ரீஹரிகோட்டா செல்கிறார். இதற்கான அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. முதல் கட்டமாக விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேலும், விமான நிலையம் முழுவதும் போலீசாரின் கட்டுப்பாட்டில் வந்துள்ளது. அங்கு துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர். பிரதமரை வரவேற்க தமிழக பாஜ சார்பில் பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.