ரஜினி பிறந்த நாளில் ‘லிங்கா’
சென்னை: ரஜினி பிறந்த நாளில் ‘லிங்கா படம் ரிலீஸ் ஆகிறது.‘கோச்சடையான் படத்தையடுத்து ரஜினி நடிக்கும் படம் ‘லிங்கா. இப்படத்தை கே.எஸ்.ரவிக்குமார் இயக்குகிறார். ‘எந்திரன் படத்தில் ரஜினியின் அதிரடி ஆக்ஷன் காட்சிகளை ரசித்தவர்களுக்கு அடுத்து ரஜினிக்கு என்ன படம் வரப்போகிறது என்ற எதிர்பார்ப்பு இருந்தது. சமீபத்தில் ‘கோச்சடையான் ரிலீஸ் ஆனது. அதில் ரஜினி நடித்த காட்சிகள் அனிமேஷனாகவே இடம்பெற்றன. இது ரசிகர்களுக்கு திருப்தி அளிக்கவில்லை. அவர்களது ஏக்கத்தை போக்கும் வகையில் ரஜினி உடனடி விருந்தாக நடித்து வரும் படம்தான் ‘லிங்கா.அனுஷ்கா, சோனாக்ஷி சின்ஹா ஹீரோயின்கள். இதன் ஷூட்டிங் வேகமாக நடந்து வருகிறது. இப்படம் ரசிகர்களுக்கு விருந்தாக ரஜினியின் பிறந்த தினமான டிசம்பர் 12ம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருக்கிறார் இயக்குனர் ரவிக்குமார்.