வருவாய்த்துறைக்கு ரூ8 கோடியில் புதிய கட்டிடங்கள் ஜெயலலிதா திறந்து வைத்தார்
சென்னை: வருவாய்த்துறைக்கு ரூ.7.74 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டிடங்களை முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார்.திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரியில் கட்டப்பட்டுள்ள வட்டாட்சியர் அலுவலக கட்டிடத்தை முதல்வர் ஜெயலலிதா நேற்று தலைமை செயலகத்தில் வீடியோ கான்பரன்சிங் மூலம் திறந்து வைத்தார்.மேலும், கோவை மாவட்டம் சூலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் கட்டப்பட்டுள்ள கட்டிடம், மதுரை மாவட்டத்தில் வருவாய் ஆய்வாளருக்கான குடியிருப்புடன் கூடிய அலுவலக கட்டிடம், தூத்துக்குடி மாவட்டத்தில் கொளத்தூர், சோழபுரம் மற்றும் கயத்தாறு ஆகிய குறுவட்ட வருவாய் ஆய்வாளர்களுக்கான குடியிருப்புடன் கூடிய அலுவலக கட்டிடங்கள், திருநெல்வேலி மாவட்டத்தில் துணை ஆட்சியர்களுக்கான நான்கு குடியிருப்புகள், கன்னியாகுமரி மாவட்டத்தில் 25 கிராம நிர்வாக அலுவலர்கள், வேலூர் மாவட்டத்தில் 4 கிராம நிர்வாக அலுவலர்கள், விருதுநகர் மாவட்டத்தில் 2 கிராம நிர்வாக அலுவலர்களுக்கான அலுவலக கட்டிடங்கள் என மொத்தம் ரூ.7 கோடியே 74 லட்சத்து 26 ஆயிரம் செலவில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை ஜெயலலிதா திறந்து வைத்தார்.