Untitled Document
Tamil Month Rasi Palan Maasi 2013
2014
26
Jun
கருணாகரச்சேரியில் சரக்கு முனையம் அமைக்க கூடாது கலெக்டரிடம் ஊராட்சி தலைவர் கோரிக்கை

tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper

ஆவடி: ஆவடி அடுத்த கருணாகரச்சேரி ஊராட்சி ராமாபுரம் கிராமத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நேற்று நடந்தது. கலெக்டர் வீரராகவராவ் தலைமை வகித்தார். திருவள்ளூர் ஆர்டிஓ அபிராமி வரவேற்றார்.அமைச்சர் அப்துல்ரகீம், 137 பேருக்கு ரூ.36.53 லட்சத்துக்கு அரசு நலத்திட்ட உதவிகளையும், 13 பேருக்கு முதியோர் உதவித்தொகை பெறுவதற்கான ஆணை களையும் வழங்கினார்.முகாமில், வண்டலூர்-மீஞ்சூர் 400 அடி புறவழி சாலையில் கருணாகரச்சேரி பகுதியில் 117 ஏக்கர் விளை நிலங்களை கையப்படுத்தி கனரக வாகன சரக்கு முனையம் அமைக்க கூடாது, இதனால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். எனவே கருணாகரச்சேரிக்கு பதிலாக வேறு இடத்தை தேர்வு செய்ய வேண்டும் என பொதுமக்கள் சார்பில் ஊராட்சி தலைவர் பக்தவச்சலம், கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்து பேசினார்.பொது சுகாதாரம், கல்வி, சமூக நலம், வருவாய், வேளாண்மை, தோட்டக்கலை, கூட்டுறவு, ஊரக வளர்ச்சி துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் கண்காட்சி அமைக்கப்பட்டிருந்தன. மேலும் மழைநீர் சேகரிப்பு குறித்த மாணவ, மாணவிகளின் வில்லுப்பாட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சியும் நடந்தது.

மேலும் சில
கருத்துகளை தெரிவிக்க

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 

 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,



Follow Me
Health Corner: Current Health News, latest medical news, health news, medical news, medical dictionary, most popular news, hospital, diets, drugs, dental care, bird flu, cancer, mens health, womens health, mental health, health articles, diabetes, medical conditions, health animation, video, Free Online Medical journals, alternative medicine - Dinakaran
 
Advertisement
Advertisement