தபால் நிலையத்தில் குண்டு வீசிய வழக்கில் 4 பேர் விடுதலை ஐகோர்ட் தீர்ப்பு
சென்னை: திராவிடர் விடுதலை கழகத்தை சேர்ந்த உமாபதி, ராவணன், மனோகரன், மாரிமுத்து ஆகியோர் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த 4 பேரும் காமன்வெல்த் மாநாட்டில் இலங்கை அதிபர் ராஜபக்சே கலந்து கொள்ள கூடாது என்று கடந்த ஆண்டு சென்னையில் உள்ள ஒரு தபால் நிலையத்தில் பெட்ரோல் குண்டு வீசினர். இந்த வழக்கில்தான் 4 பேரும் கைது செய்யப்பட்டு ஓராண்டு சிறையில் அடைக்கப்பட்டனர். தங்களை விடுதலை செய்ய சென்னை ஐகோர்ட்டில் 4 பேரும் மனு தாக்கல் செய்த¤ருந்தனர்.இந்த மனுவை நீதிபதிகள் தனபால், சொக்கலிங்கம் ஆகியோர் இன்று விசாரித்து, தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் 4 பேரும் ஓராண்டு சிறையில் அடைத்த உத்தரவு சட்ட விரோதமானது. அதை ரத்து செய்கிறோம் என தீர்ப்பு கூறினர்.