சிகரெட் பிடிக்க விசாகா டிரைனிங்
சென்னை: சிகரெட் பிடிக்க கற்று வருகிறார் விசாகா சிங்.சினிமாவில் யதார்த்தம் என்ற வார்த்தைக்காக உடலை ஒல்லியாக்குவது, குண்டாக்குவது, சிக்ஸ் பேக் வைப்பது என்று நடிகர், நடிகைகள் மெனக்கெடுகின்றனர். ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா ஹீரோயின் விசாகா சிங் சிகரெட் புகைப்பதற்கு பயிற்சி பெற்றார். ‘ரவுடி பெல்லோ என்ற தெலுங்கு படத்தில் தற்போது அவர் நடித்து வருகிறார். சில மாதங்களுக்கு முன் இப்படத்திற்காக நடன காட்சியில் நடித்தபோது தவறி விழுந்ததில் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு மாதக்கணக்கில் பெட் ரெஸ்ட்டில் இருந்தவர் சிகிச்சைக்கு பிறகு மீண்டும் படப்பிடிப்பில் கலந்துகொண்டார்.இம்முறை சிகரெட் பிடிக்கும் காட்சியில் நடித்தார். இது பற்றி விசாகா கூறும்போது, ‘எனக்கு சிகரெட் பிடிக்கும் பழக்கம் கிடையாது. அதை எப்படி விரலில் பிடிப்பது, எப்படி தீப்பற்ற வைப்பது என்றுகூட தெரியாது. ஆனால் இப்போது எல்லாம் அத்துப்படி. அதற்காக பயிற்சி எடுத்துவிட்டேன். கல்லூரி மாணவியாக இப்படத்தில் நடிக்கிறேன். குறும்புத்தனம் கொண்ட வேடம் என்பதால் சிகரெட் பிடிக்கும் காட்சியிலும் நடிக்க வேண்டி இருந்தது. தொழில் ரீதியான நடிகை என்பதால் அதை மறுக்க முடியவில்லை. கொஞ்சம் கஷ்டமான வேலையாகத்தான் இருந்தது. ஆனாலும் ஒன்றிரண்டு டேக்கில் நடித்து முடித்துவிட்டேன் என்றார்.