போர்டலீசா நகரில் நடந்த குரூப் சி பிரிவு போட்டியில் கிரீஸ் மற்றும் ஐவரிகோஸ்ட் அணிகள் மோதின. ஆட்டத்தின் 42வது நிமிடத்தில் கிரீஸ் அணியின் சமாரிஸ் அற்புதமாக கோல் அடித்து தனது அணியை முன் னிலை பெற வைத்தார். இரண்டாவது பாதியில் 74வது நிமிடத்தில் ஐவரி கோஸ்ட் அணி பதிலடி கொடுத்தது. அந்த அணியின் போனி கோல் அடித்து கோல் கணக்கை சமன் படுத்தினார். ஆட்ட நேர இறுதிவரை இரு அணிகளும் கோல் அடிக்காத நிலையில் போட்டி டிராவில் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அப்போதுதான் அந்த அதிசய சம்பவம் நடந்தது. ‘இன் ஜுரி டைம்’ எனப்படும் கூடுதல் நேரம் 4 நிமிடங்கள் வழங்கப்பட்டது. அப்போது ஐவரிகோஸ்ட் அணியின் பெனாலிடி ஏரியாவுக்குள் முன்னேற முயன்ற கிரீஸ் வீரர் சமாரிசை மாற்று வீரர் ஜியோவன்னி சியோ தடுத்து தவறிழைக்கவே கிரீஸ் அணிக்கு பெனாலிடி கிக் வாய்ப்பு வழங்கப்பட்டது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி சமாரா கோல் அடித்தார். இதன் மூலம் 2&1 என்ற கோல் கணக்கில் கிரீஸ் வென்று அடுத்த சுற்றுக்குள் நுழைந்தது.
பெலோ ஹரிசான்டே நகரில் நேற்று நள்ளிரவு நடந்த குரூப் டி பிரிவு போட்டியில் கோஸ்டாரி கா இங்கிலாந்து அணிகள் மோதின. இரு அணிகளும் தடுப்பாட்டத்தில கவனம் செலுத்தின. ஏற்கனவே அடுத்த சுற்று வாய்ப்பை இழந்திருந்த இங்கிலாந்து, கவுரவ வெற்றிக்காக போராடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இங்கிலாந்தின் வெற்றி நம்பிக்கையை தகர்த்தனர் கோஸ்டாரிகா வீரர்கள். பதற்றமின்றி விளையாடிய கோஸ்டாரிகா தடுப்பாட்ட வீரர்கள் இங்கிலாந்து அணியினரின் தாக்குதல் முயற்சிகளை ஒவ்வொரு முறையும் முறியடித்தனர். கோலை நோக்கி இங்கிலாந்து வீரர்கள் 1 முறையும், கோஸ் டாரிகா அணியினர் 2 முறைகளும் மட்டுமே ஷாட் அடித்தனர். இறுதிவரை இரு அணி வீரர்களாலும் கோல் அடிக்க முடியாத நிலையில் போட்டி டிராவில் முடிவடைந்தது.