விம்பிள்டன் டென்னிஸ் 2வது சுற்றில் நடால்
விம்பிள்டன் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் முதல் சுற்று போட்டியில் ஸ்பெயின் வீரர் ரபேல் நடால், ஸ்லொவாகிய வீரர் கிளிசானுடன் மோதினார். புல் தரையில் விளையாட தடுமாறும் நடாலுக்கு நேற்றைய போட்டியில் கடும் சவாலாக திகழ்ந்தார் கிளிசான். முதல் செட்டை 6-4 என்ற கேம் கணக்கில் வென்றார் கிளிசான். இதன் பின்னர் சுதாரித்து விளையாடிய நடால், அடுத்தடுத்த செட்களில் கிளிசானின் சர்வீஸ்களை முறியடித்தார். இதன் மூலம் அடுத்து வந்த 3 செட்களையும் நடால் கைப்பற்றினார். 4-6, 6-3, 6-3, 6-3 என்ற செட்களில் நடால் வெற்றி பெற்று 2ம் சுற்றுக்கு முன்னேறினார். பிரான்ஸ் வீரர் சோங்கா, முன்னாள் சாம்பியன் ரோஜர் பெடரர், ஆஸி. ஓபன் சாம்பியன் வாவ்ரிகா, கனடாவின் ரோனிக், ஆஸ்திரேலியாவின் ஹெவிட் ஆகியோரும் 2ம் சுற்றுக்கு முன்னேறினர்.