2 லாரி, ஒரு வேன் அடுத்தடுத்து மோதல்
மதுராந்தகம்: மதுராந்தகம் அருகே இன்று அதிகாலை டிப்பர் லாரி, டேங்கர் லாரி, மினிவேன் ஆகியவை அடுத்தடுத்து மோதின. இதில் காயம் அடைந்த 2 டிரைவர்கள் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மதுராந்தகம் அடுத்த கள்ளபிரான்புரம் தேசிய நெடுஞ்சாலையில் டிப்பர் லாரி பழுதாகி நின்றது. பின்னால் வந்த ஆயில் ஏற்றிய டேங்கர் லாரி திடீரென அதன் மீது மோதியது. அதன் பின்னால் வந்த மினிவேன், டேங்கர் லாரி மீது மோதியது. இன்று அதிகாலை இந்த விபத்தில் சேதமடைந்த டேங்கர் லாரியில் இருந்து ஆயில் கொட்டி சாலையில் ஓடியது. தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார் மற்றும் தீயணைப்பு படை வீரர்கள் வாகனங்களை அகற்றினர். இதில் டேங்கர் லாரி, மினிவேன் டிரைவர் காயம் அடைந்தனர். இருவரும் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. விபத்து பற்றி மதுராந்தகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.