பாரதிய மகிளா வங்கியில் 200 அதிகாரி பணிகள் ஐபிபிஎஸ் தேர்ச்சி பெற்றவர்களுக்கு வாய்ப்பு
பெண்களின்
பொருளாதார முன்னேற்றத்தை முக்கிய இலக்காக கொண்டு நிறுவப்பட்ட பாரதிய மகிளா
வங்கி டெல்லியை தலைமையிடமாகக் கொண்டு 23 கிளைகளுடன் இயங்கி வருகிறது.
இவற்றில் காலியாக உள்ள 200 இடங்களுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பணியின் விவரம்:
Probationary Officers (Junior Management Grade/Scale).
200 இடங்கள். (பொது - 102, ஒபிசி - 51, எஸ்சி - 28, எஸ்டி - 19). மாற்றுத்திறனாளிகளுக்கு 7 இடங்கள் உள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
சம்பளம்: ரூ.14,500 - 25,700.
வயது:
1.6.2025
தேதிப்படி 20 முதல் 30 வயதிற்குள். அதிகபட்ச வயது வரம்பில் எஸ்சி.,
எஸ்டியினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசியினருக்கு 3 வருடங்களும் தளர்வு
அளிக்கப்படும்.
தகுதி:
ஏதேனும்
ஒரு பட்டப்படிப்புடன் இந்திய வங்கி பணியாளர் தேர்வாணையத்தால் (ஐபிபிஎஸ்)
நடத்தப்பட்ட புரபேஷனரி ஆபீசர் பணிக்குரிய பொது நுழைவுத்தேர்வு
(CWEPO/MTIII) எழுதி தேர்ச்சி பெற்றவர்கள் மட்டும் மதிப்பெண் அடிப்படையில்
நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்படுவர். எனவே ஆன்லைன் விண்ணப்பத்தில் IBPSCWE
தேர்வு பற்றிய முழு விவரத்தை குறிப்பிட வேண்டும். பணிக்கு தேர்வு
செய்யப்பட்டவர்களுக்கு 2 வருடம் பயிற்சியளிக்கப்படும். பயிற்சிக்குப் பின்
நிரந்த பணி வழங்கப்படும்.
www.bmb.co.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 25.6.2025.