Untitled Document
Tamil Month Rasi Palan Maasi 2013
2014
24
Jun
ஐஏஎஸ், ஐபிஎஸ் பணிகளுக்கான சிவில் சர்வீஸ் தேர்வு அறிவிப்பு

tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper

ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட 23 வகையான சிவில் சர்வீசஸ் பணிகளில் 1,291 காலியிடங்களை மத்திய பணியாளர் தேர்வாணையம் நிரப்ப உள்ளது. இதற்கான முதல் நிலைத் தேர்வு ஆகஸ்ட் 24ம் தேதி நடத்தப்படுகிறது. இதற்கான விவரம் வருமாறு:

சிவில் சர்வீசஸ் தேர்வு (முதல்நிலை) 2014:

வயது வரம்பு:

1.8.2025 தேதிப்படி 21 லிருந்து 32க்குள். அதாவது விண்ணப்பதாரர்கள் 2.8.1982க்கு முன்னதாகவோ, 1.8.1993க்கு பின்னதாகவோ பிறந்திருக்கக் கூடாது. வயது வரம்பில் எஸ்சி., எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத் திறனாளிகளுக்கு சட்டப்படியும் தளர்வு அளிக்கப்படும்.

கல்வித்தகுதி:

மத்திய/ மாநில அரசுகளால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகத்தில் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். இதற்கு சமமாக அங்கீகரிக்கப்பட்ட தொழில்/ தொழில்நுட்ப பட்டப்படிப்பு முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்ப கட்டணம்:

ரூ.100. (எஸ்சி., எஸ்டி, மாற்றுத்திறனாளிகள், பெண்களுக்கு தேர்வு கட்டணம் கிடையாது). இதை பாரத ஸ்டேட் வங்கியில் ரொக்கமாக செலுத்தலாம் அல்லது நெட் பேங்கிங் முறை மூலம் செலுத்தலாம். முதல்நிலைத் தேர்வு, முதன்மை தேர்வு, நேர்முகத்தேர்வு ஆகிய 3 கட்டத் தேர்வுகள் மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். தமிழ்நாட்டில் சென்னை, மதுரை, கோவை ஆகிய இடங்களில் முதல்நிலைத் தேர்வு நடைபெறும். முதல்நிலைத் தேர்வு தலா 200 மதிப்பெண்களை 2 தாள்களைக் கொண்டதாகும். முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள் மட்டுமே முதன்மைத் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர்.

விண்ணப்பதாரர்கள் http://www.upsconline.nic.in/ ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க கடைசி நாள்: 30.6.2014.

முதல்நிலை தேர்வு நடைபெறும் நாள்: 24.8.2014.

23 பணிகள்:

சிவில் சர்வீசஸ் தேர்வானது 23 பணி பிரிவுகளுக்காக நடத்தப்படுகிறது. அதாவது,

Indian Administrative Service, Indian Foregin Service, Indian Police Service, Indian P - T Accounts - Finance Service, Group A, Indian Audit and Accounts Service, Group A, Indian Revenue Services (Customs and Central Excise) Group A, Indian Defence Accounts Service, India ordnance Factories Group A (Assistant Works Manager, Administration), Indian Postal Service Group A, Indian Civil Accounts Service Group A, Indian Railway Traffic Service Group A, Indian Railway Accounts Service Group A, Indian Railway Personnel Service Group A, Post of Assistant Security Commissioner in Railway Protection Force Group A, Indian Defence Estates Service Group A, Indian Information Service (Junior Grade) Group A, Indian Trade Service Group A (Gr.III), Indian Corporate Law Service Group A, Armed Forces Headquarters Civil Service Group B (Section Officer'S Grade, Delhi, Andaman - Nicobar Islands, Lakshadweep, Daman - Diu and Dadra - Nagar Haveli Police Service Group B, Pondicherry Civil Service, Group B.

மேலும் சில
கருத்துகளை தெரிவிக்க

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 

 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,



Follow Me
Health Corner: Current Health News, latest medical news, health news, medical news, medical dictionary, most popular news, hospital, diets, drugs, dental care, bird flu, cancer, mens health, womens health, mental health, health articles, diabetes, medical conditions, health animation, video, Free Online Medical journals, alternative medicine - Dinakaran
 
Advertisement