Untitled Document
Tamil Month Rasi Palan Maasi 2013
2014
23
Jun
நிறவெறியை வெளிப்படுத்திய ஜெர்மன் ரசிகர்கள்?


உலக கோப்பை கால்பந்து போட்டியில் ஜெர்மன்- கானா அணிகளுக்கிடையிலான போட்டி நேற்று நடந்தது. இந்த போட்டியை காண போர்லிலா மைதானத்தில்  ஜெர்மன் ரசிகர்கள் பெருமளவில் குவிந்திருந்தனர். இந்த போட்டியில் பலம் வாய்ந்த ஜெர்மன் அணியுடன் 2 கோல் அடித்து கானா முன்னணியில் இருந்தது. கடைசி நேரத்தில் போராடி ஜெர்மன் ஒரு கோல் அடித்து போட்டியை சமன் செய்தது.இப்போட்டியின் போது ஜெர்மனியை சேர்ந்த ரசிகர் ஒருவர் நாஜி ஆதரவு கோஷங்களுடன் அரை நிர்வாண கோலத்தில் மைதானத்தில் நுழைந்தார். கானாவின் மிட்பீல்டர் சுள்ளி முண்டாரி தடுத்து வெளியேற்றினார். இந்நிலையில் போட்டியை காண குவிந்திருந்த ஜெர்மன் ரசிகர்கள் பலரும் நாஜி ஆதரவு கோஷங்களுடன், கருப்பர் களை விமர்சிக்கும் வாசகங்களுடன் கூடிய டி சர்ட் அணிந்தும், முகங்களில் கருப்பு வர்ணம் பூசியும்  போட்டியை ரசித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டுள்ளன.

தற்போது இந்த விவகாரம் பிபாவுக்கு புதிய தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. ஜெர்மனி ரசிகர்கள் நிறவெறியை வெளிப்படுத்தியுள்ளனர் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இத்த கைய நடவடிக்கைகளை பொறுத்துகொள்ளமுடியாது. இது குறித்து ஒழுங்கு நடவடிக்கை குழு விசாரணை நடத்தப்படும் என பிபாவின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். ஏற்கனவே ரஷ்யா, குரோ ஷியா பங்கேற்ற போட்டிகளிலும் நிறவெறி ஆதரவு கருத்துக் களை வெளிப்படுத்தும் பேனர்களை சிலர் காட்டியதாக ஏற்கனவே பிபாவிடம் நிறவெறிக்கு எதிரான ஐரோப்பிய கூட்டமைப்பினர் புகார் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் சில
கருத்துகளை தெரிவிக்க

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 

 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,



Follow Me
Health Corner: Current Health News, latest medical news, health news, medical news, medical dictionary, most popular news, hospital, diets, drugs, dental care, bird flu, cancer, mens health, womens health, mental health, health articles, diabetes, medical conditions, health animation, video, Free Online Medical journals, alternative medicine - Dinakaran
 
Advertisement
Advertisement