Untitled Document
Tamil Month Rasi Palan Maasi 2013
2014
21
Jun
ஆஸ்திரேலியாவில் இறந்த 200 கிலோ குண்டு மனிதரின் உடலை வாங்க மருத்துவமனை மறுப்பு இரவு முழுவதும் காரில் வைத்திருந்த அவலம்

tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper

சிட்னி:ஆஸ்திரேலியாவில் இறந்து போன 200 கிலோ எடை கொண்ட குண்டு மனிதரின் உடலை மருத்துவமனை வாங்க மறுத்துவிட்டதால் இரவு முழுவதும் காரில் வைத்திருக்கும் அவல நிலை ஏற்பட்டது.ஆஸ்திரேலியாவில் இறந்து போனவர்களுக்கு இறுதி சடங்கு நடத்துவதற்கு என்று தனியார் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. உறவினர்கள் இறந்தவரின் உடலை நிறுவனங்களிடம் ஒப்படைத்து விடுவது வழக்கம். இதற்காக தனியாக கட்டணங்களும் வசூலிக்கப்படுகின்றன.

இறுதி சடங்கு நிறுவனம் ஒன்றை நடத்தி வரும் ஜோன் கம்மிங்ஸ் என்பவர் நேற்று முன்தினம் இறந்து போன ஒருவரின் உடலை வாங்கிக் கொண்டு ஹெட்லாந்து மருத்துவமனைக்கு வந்தார். மறுதினம் காலையில் தான் இறுதி சடங்கு செய்ய வேண்டும் என்பதால் அதனை மருத்துவமனை பிரேத கிடங்கில் பாதுகாக்க விரும்பினார். இறந்தவரின் உடல் எடை 200 கிலோ என்பதால் மருத்துவமனை நிர்வாகம் அதனை வாங்க மறுத்துவிட்டது.

இதுகுறித்து ஜோன் கம்மிங்ஸ் கூறுகையில், ÔÔசுமார் 2 மணிநேரம் எனது காரில் பிணத்தை வைத்துக் கொண்டு பயணம் செய்து இங்கு வந்தேன். உடல் எடை 200 கிலோ என்பதால் குளிர்பதன பெட்டியில் வைக்க முடியாது என்று கூறி வாங்க மறுத்துவிட்டனர். இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் பிணத்தை கொண்டு வந்த பெட்டியோடு எனது காரில் இரவு முழுவதும் வைத்து ஒவ்வொரு அரைமணிநேரத்திற்கு ஒருமுறை கார் ஏசியை முழு வீச்சியில் இயக்கி மறுநாள் வரை உடலை பாதுகாக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டேன். மறுநாள் வேறு ஒரு கன்டெய்னரை தயார் செய்து உடலை அதில் மாற்றி எடுத்து செல்ல வேண்டியதாயிற்று'' என்று வருத்தத்துடன் தெரிவித்தார்.

மேலும் சில
கருத்துகளை தெரிவிக்க

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 

 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,



Follow Me
Health Corner: Current Health News, latest medical news, health news, medical news, medical dictionary, most popular news, hospital, diets, drugs, dental care, bird flu, cancer, mens health, womens health, mental health, health articles, diabetes, medical conditions, health animation, video, Free Online Medical journals, alternative medicine - Dinakaran
 
Advertisement
Advertisement