ஆயில் இந்தியா நிறுவனத்தில் அதிகாரி பணிக்கு விண்ணப்பிக்கலாம்
அசாம்
மாநிலம், திப்ருகார் மாவட்டத்தில் டுலியஜானில் உள்ள மத்திய அரசின்
பொதுத்துறை நிறுவனமான இந்திய ஆயில் நிறுவனம் எண்ணெய் வயல்களை கண்டறிதல்,
இயற்கை எரிவாயு உற்பத்தி, கச்சா எண்ணெயை பல்வேறு இடங்களுக்கு அனுப்புவது,
எல்பிஜி கேஸ் உற்பத்தி ஆகிய பணிகளை செய்து வருகிறது. இந்த நிறுவனத்தில்
காலியாக உள்ள 'கான்பிடன்ஷியல் செயலாளர்' பணியிடங்களுக்கு தகுதியானவர்கள்
விண்ணப்பிக்கலாம்.
பணியின் விவரம்:
கான்பிடன்ஷியல் செக்ரட்டரி: 9 இடங்கள் (பொது - 6, ஒபிசி - 2, எஸ்டி - 1).
சம்பளம்: ரூ.20,600 - 46,500.
தகுதி:
ஏதேனும்
ஒரு பட்டப்படிப்புடன் செக்ரட்டரியல் பிராக்டீஸ் அல்லது மாடர்ன் ஆபீஸ்
அல்லது எக்சிக்யூக்டிவ் பாடத்தில் 2 ஆண்டு டிப்ளமோ மற்றும் சம்பந்தப்பட்ட
துறையில் 2 ஆண்டுகள் முன்அனுபவம். கம்ப்யூட்டர் அறிவு விரும்பத்தக்கது.
வயது:
21.06.2025 அன்று 30க்குள். இடஒதுக்கீடு பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பில் சலுகை உண்டு.
மாதிரி விண்ணப்பம், தேர்வு விவரங்கள் ஆகிய விவரங்களுக்கு www.oilindia.com என்ற இணையதளத்தை பார்க்கவும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 21.6.2014.