புதுடெல்லியில்
உள்ள இந்திய நாடாளுமன்ற செயலகத்தில் மொழிபெயர்ப்பாளர், பிரின்டர், வேர்
ஹவுஸ்மென் உள்ளிட்ட 16 இடங்கள் காலியாக உள்ளன. தகுதியானவர்கள்
விண்ணப்பிக்கலாம்.
பணியிடங்கள்:
1. பார்லிமென்டரி இன்டர்பிரட்டர் - நிலை (2): மொத்த இடங்கள்: 9 (பொது - 7, எஸ்சி - 1, எஸ்டி - 1).
இவற்றில்
ஆங்கிலத்திற்கு 2 இடங்களும், இந்தி, போடோ, டோக்ரி, குஜராத்தி, காஷ்மீரி,
கொங்கனி, சந்தாலி, சிந்தி ஆகிய மொழிகளுக்கு தலா ஒரு இடமும்
ஒதுக்கப்பட்டுள்ளன.
தகுதி:
பட்டப்படிப்பு
வரை இந்தி மொழியில் படித்திருப்பதோடு ஆங்கில பாடத்தில் முதுநிலை பட்டம்
அல்லது பட்டப்படிப்பு வரை ஆங்கில மொழியில் படித்திருப்பதோடு இந்தி
பாடத்தில் முதுநிலை பட்டம். மொழி பெயர்ப்புப் பணியில் முன் அனுபவம்.
கம்ப்யூட்டர் படிப்பில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
வயது: 27க்குள்.
மாநில மொழி பெயர்ப்பாளர்கள் பணிக்கு:
தகுதி:
ஆங்கிலம்
அல்லது ஏதேனும் ஒரு பாடத்தில் முதுநிலை பட்டம் (ஆங்கில வழியில்
படித்திருக்க வேண்டும்) அல்லது தாய்மொழியை ஒரு பாடமாக படித்திருக்க
வேண்டும். கம்ப்யூட்டரில் சான்றிதழ் படிப்பு படித்திருக்க வேண்டும்.
வயது: 35க்குள்.
சம்பளம்: ரூ.15,600 - 39,100 மற்றும் தர ஊதியம் ரூ.5,400.
பிரின்டிங்
டெக்னாலஜி பாடத்தில் 3 ஆண்டு டிப்ளமோ அல்லது ஏதேனும் ஒரு பட்டப்படிப்புடன்
பிரின்டிங்கில் 3 ஆண்டுகள் முன் அனுபவம் அல்லது பிளஸ் 2 படிப்புடன்
பிரின்டிங்கில் 5 ஆண்டுகள் முன் அனுபவம்.
வயது: 27க்குள்.
சம்பளம்: ரூ.5,200 - 20,200 மற்றும் தர ஊதியம் ரூ.2,800.
3. வேர் ஹவுஸ்மேன்: 2 இடங்கள் (பொது - 1, எஸ்சி - 1).
தகுதி:
மெட்ரிகுலேசன்
அல்லது அதற்கு சமமான கல்வித்தகுதி அல்லது பிரின்டிங் டெக்னாலஜியில்
டிப்ளமோ அல்லது பிரின்டிங் தொழிலில் 5 ஆண்டுகள் முன் அனுபவம்.
வயது: 27க்குள்.
அனைத்து பணிகளுக்கும் 30.6.2025 தேதிப்படி கணக்கிடப்படும். மாதிரி விண்ணப்பம் மற்றும் கூடுதல் விவரங்களுக்கு http://www.loksabha.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.
விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி:
THE JOINT RECRUITMENT CELL, ROOM NO: 521, PARLIAMENT HOUSE ANNEXE, NEWDELHI 110001. விண்ணப்பிக்க கடைசி நாள்: 30.6.2014.