பகுஜன்சமாஜ் பிரமுகர் திருமணம் புழலில் இன்று நடக்கிறது ஆம்ஸ்ட்ராங் பங்கேற்பு
புழல்: பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக மாணவரணி அமைப்பாளர் வழக்கறிஞர் பொத்தூர் சுரேஷ் என்பவருக்கும், பெரியபாளையம் டாக்டர் அம்பேத்கர் நகரை சேர்ந்த பல்லவி என்பவருக்கும் திருமணம் புழல் காவாங்கரை ராணி சங்குபதி திருமண மஹாலில் இன்று மாலை 6 மணிக்கு நடக்கிறது. கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் தலைமை வகிக்கிறார். மணமகனின் பெற்றோர் வடிவேல்-வாசுகி, மணமகளின் பெற்றோர் சுப்பிரமணி-தேன்மொழி ஆகியோர் வரவேற்கிறார்கள். பவுத்த அரவனடிகள் அசின்வாத்யா, போதிபாலா, சுமேதோ, அசவகோஷா, மவுரிய மெத்தப்பால் ஆகியோர் பவுத்த பண்பாட்டு முறையில் திருமணத்தை நடத்தி வைக்கிறார்கள். நிகழ்ச்சியில் சமூக பெருமக்கள், வழக்கறிஞர்கள் உள்ளிட்ட அனைத்து கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்துகின்றனர்.