ஐ.ஓ.சி பாலுவின் இல்ல திருமண விழா
சென்னை: மயிலாப்பூரில் உள்ள ஏ.வி.எம் ராஜேஸ்வரி கல்யாண மண்டபத்தில் ஐ.ஓ.சி பாலுவின் இல்ல திருமண வரவேற்பு விழா இன்று மாலை 6 மணிக்கு நடக்கிறது. இவ்விழாவிற்கு முன்னாள் மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் தலைமை தாங்குகிறார். சிறப்பு விருந்தினர்களாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், காங்கிரஸ் மாநில தலைவர் ஞானதேசிகன், ஈ.வி.கே எஸ். இளங்கோவன், பீட்டர் அல்போன்ஸ், கராத்தே தியாகராஜன், ரங்கபாஷ்யம், மயிலை அசோக், ஜெ.எம் ஆரூண், தமிழ்நாடு இந்து மாஹா சபா தலைவர் கோடம்பாக்கம் ஸ்ரீ, துறைமுகம் டாக்டர் ஆர்.ரவிராஜ் மற்றும் இந்தியன் ஆயில் தொழிற்சங்க பொதுச்செயலாளர் டி.எஸ்.ரங்கராஜன், எஸ்.மோகன்ராஜ், வி.கே. பாலசுப்பிரமணியம் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.