சென்னை எஸ்.ஐ. மகள் காதலனுடன் போலீசில் தஞ்சம்
நாட்றம்பள்ளி: வேலூர் மாவட்டம் ஆம்பூர் கிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ் மகன் பிரபு(28). கார் டிரைவர். சென்னை வளசரவாக்கம் சப்-இன்ஸ்பெக்டர் பிரகாஷ் மகள் வைஜெயந்தி(24). கல்லூரிக்கு பஸ்சில் சென்று வந்தபோது பிரபுவுக்கும், வைஜெயந்திக்கும் இடையே நட்பு ஏற்பட்டு காதலாக மாறியது. பின்னர் இருவரும் அடிக்கடி செல்போன் மூலம் தங்களது காதலை வளர்த்து வந்தனர். சில மாதங்களுக்கு முன்பு வைஜெயந்திக்கு அவரது பெற்றோர் வேறு இடத்தில் திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர். இதனால் வைஜெயந்தியும், பிரபுவும் கடந்த 1ம்தேதி வீட்டைவிட்டு வெளியேறி வேலூரில் உள்ள ஒரு கோயிலில் திருமணம் செய்து கொண்டனர். தகவலறிந்த இருவீட்டாரும் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.இதனால் தங்களுக்கு பாதுகாப்பு கோரி காதல் ஜோடியினர் நேற்று நாட்றம்பள்ளி போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். இதையடுத்து சப்&இன்ஸ்பெக்டர் பூஞ்சோலை மற்றும் போலீசார் இருதரப்பினர் குடும்பத்தினரை வரவழைத்து சமரசம் செய்து காதல்ஜோடியை அனுப்பி வைத்தனர்.