மதுராந்தகத்தில் ஆணழகன் போட்டி
மதுராந்தகம்: மதுராந்தகத்தில் ஆணழகன் போட்டி நடந்தது. பல்வேறு பிரிவுகளில் வெற்றி பெற்றவர்களுக்கு செந்தில் குமரன் பரிசு வழங்கினார். மதுராந்தகத்தில் ஹெர்குலிஸ் உடற்பயிற்சி நிலை யம் உள்ளது. இதன் 29வது ஆண்டு விளையாட்டு விழா மற்றும் ஆணழகன் போட்டி நேற்று மாலை நடந்தது. இதற்கு மாரியப்பன் தலைமை வகித்தார். மின்வாரிய அதிகாரி முனுசாமி, டாக்டர் சீனுவாசன், குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொன்மாறன் வரவேற்றார். இதில் 55 கிலோ உடல் எடை பிரிவில் கண்ணன் முதலிடம், ரமேஷ் இரண்டாம் இடம், 65 கிலோ எடை பிரிவில் புருஷோத்தமன் முதலிடம், பாபு இரண்டாம் இடம், அதற்கு மேலான எடை பிரிவில் சத்யராஜ் முதலிடம், சதிஷ்குமார் இரண்டாம் இடம், இன்னொரு பிரிவில் சந்தோஷ் முதலிடம், மோகன் இரண்டாம் இடம் வந்தனர். இவர்களுக்கு சிறப்பு அழைப்பாளர் செந்தில் குமரன் பரிசு வழங்கினார். நடுவர்களாக நாகேஷ் பிரகாஷ், பால்ராஜ், பழனி ஆகியோர் இருந்தனர். உமாபதி, மணிஷ்குமார் ஜெயின் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை மாஸ்டர் ரத்னம் செய்திருந்தார்.