ஹன்சிகா விலகல் ரகுல் லபக்
கால்ஷீட் பிரச்னையால் ஹன்சிகா விலகிய பட வாய்ப்பை ரகுல் பிரீத் பறித்தார்.தமிழ், தெலுங்கு என கை நிறைய படங்களுடன் நடித்து வருகிறார் ஹன்சிகா. இந்நிலையில் சிம்புவுடன் நடித்து வந்த ‘வாலு‘ படத்தின் 2 பாடல் காட்சிகளை நடிக்காமல்போக்கு காட்டி வந்தார். இப்பிரச்னைபற்றி தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் செய்யப்பட்டது. உடனடியாக கால்ஷீட் ஒதுக்கி தந்து நடித்துக்கொடுக்க வேண்டும் என்று சங்கம் உத்தரவிட்டது. அதை ஏற்று நடித்துக்கொடுக்க சம்மதித்தார் ஹன்சிகா.
வேறு படங்களில் நடிக்க கால்ஷீட் ஒதுக்கி இருந்த ஹன்சிகாவுக்கு இதனால் சிக்கல் ஏற்பட்டது. ஏற்கனவே ஒப்புக்கொண்டிருந்த ‘வெங்கடாத்ரி எக்ஸ்பிரஸ்’ என்ற படத்தில் நடிப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இதையடுத்து அவர் அப்படத்திலிருந்து விலகினார். அந்த வாய்ப்பு தற்போது ரகுல் பிரீத் லபக் செய்துள்ளார். இதுபற்றி ஹன்சிகா தாயார் கூறும்போது,‘வெங்கடாத்ரி எக்ஸ்பிரஸ் படத்திலிருந்து ஹன்சிகா நடிக்காமல் பின்வாங்கிவிட்டார். பல படங்களில் அவர் நடித்து கால்ஷீட் ஒதுக்குவதில் பிரச்னை உள்ளது. இதனால்தான் குறிப்பிட்ட படத்திலிருந்து வெளியேறிவிட்டார்‘ என்றார்.