நஸ்ரியாவின் ‘நேரம்’ தெலுங்கில் ரீமேக் ஆகுமா?
நஸ்ரியா நடித்துள்ள ‘நேரம் படத்தின் ரீமேக் உரிமையை வாங்கி இருக்கிறார் மூத்த இயக்குனர். ஒரு வருடம் ஆகியும் ஷூட்டிங் தொடங்கப்படவில்லை.
நிவின், நஸ்ரியா நாசிம் நடித்த படம் ‘நேரம்‘ கடந்த ஆண்டு திரைக்கு வந்து வெற்றி பெற்றது. இப்படத்தையடுத்து ஹீரோயின் நஸ்ரியாவுக்கு படங்கள் குவியத் தொடங்கின. அவரோ திடீரென்று திருமணம் செய்துகொள்ள முடிவு செய்துள்ளார். மலையாள நடிகர் பஹத் பாசிலை விரைவில் அவர் மணக்க உள்ளார்.
முன்னதாக ‘நேரம்‘ படத்தை தெலுங்கில் ரீமேக் செய்ய விரும்பினார் டோலிவுட்டில் 100 படங்களை இயக்கியவரான தாசரி நாராயணராவ்.
ஒரு வருடம் கடந்த நிலையில் இன்னும் அப்படத்தை இயக்காமல் இருக்கிறார் தாசரி. இதுபற்றி அவரிடம் கேட்டபோது,‘நேரம் படம் எனக்கு பிடித்தது. ஒரே நாளில் முழுகதையும் நடப்பதுபோல் அமைக்கப்பட்டுள்ளது. இதன் டோலிவுட் உரிமையை நான் வாங்கி இருக்கிறேன். என்னுடைய உதவியாளர் ரவிகுமார் இயக்க உள்ளார். முதலில்தான் நான் இயக்க விரும்பினேன். ஆனால் பல்வேறு காரணங்களால் அது தாமதமானது. ஆனால் படம் இயக்க வேண்டும் என்ற எண்ணத்தை கைவிடவில்லை‘ என்றார்.