Untitled Document
Tamil Month Rasi Palan Maasi 2013
2014
11
Apr
பூங்காவில் ஆசாமியிடம் இருந்து எஜமானியை காப்பாற்றிய கிளி லண்டனில் பரபரப்பு


லண்டன்: லண்டனில் உள்ள பூங்காவில் தனது எஜமானியை தாக்கிய ஒருவனை, தனது அலகு மற்றும் இறக்கையால் தாக்கி ஒரு கிளி ஹீரோவை போல் காப்பாற்றி  உள்ளது. இங்கிலாந்து தலைநகர் லண்டன் அருகே உள்ள ஹிண்டனில் உள்ள சன்னி மலை பூங்காவுக்கு கடந்த வாரம் 25 வயது இளம்பெண் தனது ஆப்ரிக்க சாம்பல் நிற  செல்ல கிளி உன்சியுடன் சென்றார். பூங்காவை தனது செல்லக்கிளியுடன் சுற்றிப் பார்த்துவிட்டு அந்த பெண் வெளியே வந்தார். அப்போது, அந்த பெண்ணின் தோள் மீது  ஒருவன் இடித்தான். அதை அந்த பெண் தட்டி கேட்கவே, அந்த வாலிபன் இளம்பெண்ணை கீழே தள்ளி அடிக்க முயன்றான்.

எஜமானியை ஒருவன் கீழே தள்ளி தாக்குவதை கண்ட செல்ல கிளி, வாலிபனை அலகால் சரமாரியாக கொத்தியது. கிளி கிறீச்சிட்டு பறந்து பறந்து வாலிபனை கொத்தியது.  சத்தம் கேட்டு பூங்காவில் இருந்த மற்றவர்கள் ஓடி வந்தனர். அதற்குள் வாலிபன் தப்பி ஓடிவிட்டான். வாலிபர் தாக்கியதில் இளம்பெண்ணுக்கு காயம் ஏற்பட்டுள்ளது.  ஹீரோ போல் செயல்பட்டு எஜமானியை செல்ல கிளி காப்பாற்றி விட்டது. வாலிபரை தேடி வருகிறோம் என்று லண்டன் போலீசார் கூறினர்.

மேலும் சில
கருத்துகளை தெரிவிக்க

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 

 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,



Follow Me
Health Corner: Current Health News, latest medical news, health news, medical news, medical dictionary, most popular news, hospital, diets, drugs, dental care, bird flu, cancer, mens health, womens health, mental health, health articles, diabetes, medical conditions, health animation, video, Free Online Medical journals, alternative medicine - Dinakaran
 
Advertisement