திருக்கழுக்குன்றத்தில் அரசு மகளிர் பள்ளியில் மருத்துவ முகாம்
செங்கல்பட்டு:முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு திருக்கழுக்குன்றம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் கலெக்டர் பாஸ்கர், அமைச்சர் சின்னையா ஆகியோர் தலைமையில் நாளைமருத்துவ முகாம் நடத்தப்பட உள்ளது. இதில் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையை சேர்ந்த 50 டாக்டர்கள் உள்பட 130 பேர் கலந்து கொள்கின்றனர்.
முகாமில் மகளிர், குழந்தைகள் நல மருத்துவம், பொது மருத்துவம் உள்பட அனைத்து வியாதிகளுக்கும் பரிசோதனை செய்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. மேலும், அந்த இடத்திலேயே எக்ஸ்ரே, சிறுநீர் பரிசோதனை நடத்தப்பட்டு, மருந்து, மாத்திரைகள் வழங்கப்படுகிறது.திருக்கழுக்குன்றம் ஒன்றியத்தில் உள்ள 54 பஞ்சாயத்தை சேர்ந்த பொதுமக்கள் பயனடைவார்கள். இதற்காக பஸ் வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. இதனை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என கூறப்பட்டுள்ளது.