Untitled Document
Tamil Month Rasi Palan Maasi 2013
2014
08
Feb
சங்ககரா சாதனை

tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper

இலங்கை வங்கதேசம் இடையிலான 2வது டெஸ்ட் சிட்டகாங்கில் நடந்து வருகிறது. முதல் இன்னிங்சில் இலங்கை 587 ரன்களும், வங்கதேசம் 426 ரன்களும் குவித்தன. 161 ரன்கள் முன்னிலையுடன் 4வது நாளான நேற்று 2வது இன்னிங்சை ஆடிய இலங்கை 75.5 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 305 ரன்கள் சேர்த்து டிக்ளேர் செய்தது.

36 ரன்னில் கேட்ச் வாய்ப்பில் இருந்து தப்பித்த சங்ககரா 105 ரன்னும், தினேஷ் சன்டிமால் 100 ரன்னும் விளாசினர். 467 ரன்கள் இலக்குடன் வங்கதேசம் 2வது இன்னிங்சை ஆடியது. நேற்றைய ஆட்டம் முடிவில் அந்த அணி விக்கெட் இழப்பின்றி 12 ரன்கள் எடுத்தது. இன்று கடைசி நாள் ஆட்டம் நடக்கிறது.
இந்த டெஸ்டில் சங்ககரா மூன்று விதமான சாதனைகளை படைத்தார். முதல் இன்னிங்சில் 319 ரன்களை விளாசிய அவர் 2வது இன்னிங்சிலும் சதம் அடித்தார். இதன் மூலம் கிரிக்கெட் வரலாற்றில் ஒரே டெஸ்டில் முச்சதமும், சதமும் விளாசிய 2வது வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இதற்கு முன்பு இங்கிலாந்தின் கிரஹாம் கூச் 1990ல் இந்தியாவுக்கு எதிராக இந்த சாதனையை படைத்திருந்தார்.

சங்ககராவுக்கு இது 35வது சதம். அதிக சதங்கள் அடித்தவர்களின் பட்டியலில் கவாஸ்கர், லாராவை பின்னுக்கு தள்ளிவிட்டு சங்ககரா 5வது இடத்தை பிடித்துள்ளார். தற்போது நடந்து வரும் டெஸ்டில் சங்ககரா மொத்தம் 424 ரன்கள் (319, 105) குவித்துள்ளார். ஒரு டெஸ்டில் மொத்தமாக அதிக ரன்கள் எடுத்தவர்களின் வரிசையில் சங்ககரா 3வது இடத்தில் உள்ளார். இந்த வகையில் இங்கிலாந்தின் கிரஹாம் கூச் 456 ரன்களுடன் முதலிடத்திலும், ஆஸ்திரேலியாவின் மார்க் டெய்லர் 426 ரன்களுடன் 2வது இடத்திலும் உள்ளனர்.

மேலும் சில
கருத்துகளை தெரிவிக்க

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 

 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,



Follow Me
Health Corner: Current Health News, latest medical news, health news, medical news, medical dictionary, most popular news, hospital, diets, drugs, dental care, bird flu, cancer, mens health, womens health, mental health, health articles, diabetes, medical conditions, health animation, video, Free Online Medical journals, alternative medicine - Dinakaran
 
Advertisement