போப் பிரான்சிஸ்க்கு சொந்தமான பைக் 2.40 கோடிக்கு ஏலம்
பாரிஸ்:போப் ஆண்டவர் பிரான்சிஸ்க்கு சொந்தமான மோட்டார் சைக்கிள், ஏலத்தில் ரூ.2.40 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டது.பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நடைபெற்ற ஏல நிகழ்ச்சியில் போப் பிரான்சிஸ் கலந்து கொண்டார். இதில் போப் பிரான்சிஸ்க்கு சொந்தமான டேவிட்சன் ஹார்லி நிறுவனத்தின் மோட்டார் சைக்கிள் ஏலம் விடப்பட்டது. அப்போது அதன் அசல் விலையை விட 20 மடங்கு அதிகமாக ரூ.2.40 கோடிக்கு ஏலத்துக்கு போனது. 1585 சிசி இன்ஜின் திறனுடைய டைனா சூப்பர் கிளைடு ரகத்தை சேர்ந்த இந்த மோட்டார் சைக்கிள், கடந்த ஜூன் மாதம் அந்த நிறுவனத்தின் 110 ஆண்டு நிறைவை முன்னிட்டு போப் பிரான்சிஸ்க்கு பரிசாக வழங்கப்பட்டது.
பின்னர் இந்த மோட் டார் சைக்கிளை ரோம் ஏழைகள் அறக்கட்ட ளைக்கு போப் பரிசாக அளித்தார். தற்போது நடைபெற்ற ஏலத்தின் மூலம் கிடைக்கும் நிதியை ஏழைகளின் நலத்திட்டங்களுக்கு பயன்படுத்த போவதாக அறக்கட்டளை தெரிவித்துள்ளது. பெட்ரோல் டேங்க்கின் மேற்புறத்தில் போப் பிரான்சிஸ் தனது கையெழுத்திட்டு கொடுத் தார். மோட்டார் சைக்கிளை ஏலத்தில் எடுத்தவரின் பெயரை வெளியிட ஏல நிறுவனம் மறுத்துவிட்டது. ஏலத்தில் கலந்து கொள்ள வந்த போப் பிரான்சிசை ஏராளமானோர் சந்தித்து ஆசி பெற்றனர்.