உலககோப்பை 20-20 இந்தியா 2 பயிற்சி ஆட்டத்தில் பங்கேற்பு
5வது 20&20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த மாதம் 16ந்தேதி முதல் ஏப்ரல் 6ந்தேதி வரை வங்கதேசத்தில் நடக்கிறது. இதில் இந்தியா, நடப்பு சாம்பியன் வெஸ்ட் இண்டீஸ் உள்ளிட்ட 16 அணிகள் பங்கேற்கின்றன. இத்தொடருக்கு முன்னதாக ஒவ்வொரு அணிகளும் பயிற்சி ஆட்டத்தில் பங்கேற்கின்றன. மொத்தம் 16 போட்டிகள் நடக்கின்றன. இப்போட்டிகள் மிர்புர், சிட்டகாங், தாகாவில் நடைபெறுகிறது. மார்ச் 17ம் தேதி நடக்கவுள்ள பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி, இலங்கையை எதிர்கொள்கிறது. அதன்பின் இங்கிலாந்தை 19ந்தேதி சந்திக்கிறது. பிரதான சுற்றில் இந்தியா தனது முதல் ஆட்டத்தில் 21ந்தேதி பாகிஸ்தானை எதிர்கொள்கிறது.