Untitled Document
Tamil Month Rasi Palan Maasi 2013
2014
03
Feb
இந்திய ராணுவத்தில் குருப் 'சி' பணிகள், 10ம் வகுப்பு, பிளஸ் 2 தகுதி போதும்

tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper

மத்திய பாதுகாப்புத் துறையின் கீழ் உள்ள இந்திய ராணுவத்தில் 5121 படைப்பிரிவில் காலியாக உள்ள 100 குருப் 'சி' பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.'

பணி விவரம்:

1. வெஹிக்கிள் மெக்கானிக்: 1 இடம் (பொது).

தகுதி: மெட்ரிகுலேசன் அல்லது அதற்கு சமமான கல்வித்தகுதி மற்றும் ஆட்டோமொபைல் டிரேடில் என்சிவிடி சான்றிதழ் அல்லது ஐடிஐ. சம்பந்தப்பட்ட துறையில் 2 ஆண்டுகள் முன் அனுபவம்.

2. சவேவாலா: (பல்நோக்கு பணியாளர்) 2 இடங்கள் (பொது).

தகுதி: மெட்ரிகுலேசன் அல்லது அதற்கு சமமான கல்வித்தகுதி.

3. லோயர் டிவிசன் கிளார்க்: 4 இடங்கள் (பொது & 1, எஸ்சி & 2, ஒபிசி & 1).

தகுதி: பிளஸ் 2 மற்றும் கம்ப்யூட்டரில் ஆங்கிலத்தில் ஒரு நிமிடத்திற்கு 35 வார்த்தைகள் டைப் செய்யும் திறன் அல்லது கம்ப்யூட்டரில் இந்தி டைப்பிங்கில் நிமிடத்திற்கு 30 வார்த்தைகள் டைப் செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

4. கிளீனர்: 3 இடங்கள் (பொது & 2, எஸ்சி & 1).

தகுதி: மெட்ரிகுலேசன் அல்லது அதற்கு சமமான கல்வித்தகுதி.

5. சமையலர்: 3 இடங்கள் (பொது & 2, ஒபிசி & 1).

தகுதி: மெட்ரிகுலேசன் அல்லது அதற்கு சமமான கல்வித்தகுதி.

6. சிவிலியன் மோட்டார் டிரைவர்: 86 இடங்கள் (பொது & 42, எஸ்சி & 23, ஒபிசி & 21).

தகுதி: மெட்ரிகுலேசன் அல்லது அதற்கு சமமான கல்வித்தகுதி மற்றும் கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருப்பதோடு 2 ஆண்டுகள் டிரைவிங்கில் முன்அனுபவம் இருக்க வேண்டும்.

7. தார்பாலின் மேக்கர்: 1 இடம் (பொது).

தகுதி: மெட்ரிகுலேசன் அல்லது அதற்கு சமமான கல்வித்தகுதியுடன் சம்பந்தப்பட்ட டிரேடில் சிறப்புத் தகுதி பெற்றிருக்க வேண்டும்.

வயது:

வெஹிகிள் மெக்கானிக், எல்டிசி, கிளீனர், சவேவாலா, குக் மற்றும் தார்பாலின் மேக்கர் ஆகிய பணிகளுக்கு 8.2.2025 அன்று பொதுப் பிரிவினருக்கு 18 முதல் 25க்குள். எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் அதிகபட்ச வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

சிவிலியன் மோட்டார் டிரைவர் பணிக்கு 8.2.2025 அன்று பொதுப் பிரிவினருக்கு 18 முதல் 27க்குள். எஸ்சி., எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் அதிகபட்ச வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

உடற்திறன் தேர்வு, எழுத்துத்தேர்வு, உளவியல் தேர்வு, நேர்முகத்தேர்வு ஆகிய தேர்வுகளின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். ஒன்றுக்கு மேற்பட்ட பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தனித்தனி விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.

மாதிரி விண்ணப்பம் மற்றும் கூடுதல் விவரங்களுக்கு

http://indianarmy.nic.in/writereaddata/WhatsNew/435/MCTE.pdf
என்ற இணையதளத்தை பார்க்கவும்.

விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி:

The Commanding Officer.
5121 ASC BN (MT), PIN: 905121
C/O 56 A PO.


விண்ணப்பிக்க கடைசி நாள்:
7.2.2014.

மேலும் சில
கருத்துகளை தெரிவிக்க

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 

 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,



Follow Me
Health Corner: Current Health News, latest medical news, health news, medical news, medical dictionary, most popular news, hospital, diets, drugs, dental care, bird flu, cancer, mens health, womens health, mental health, health articles, diabetes, medical conditions, health animation, video, Free Online Medical journals, alternative medicine - Dinakaran