தூத்துக்குடியை
தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் பல்வேறு
கிளைகளில் காலியாக உள்ள மார்க்கெட்டிங் ஆபீசர்ஸ், அசிஸ்டென்ட் மேனேஜர்
பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து ஆன்லைனில் விண்ணப்பங்கள்
வரவேற்கப்படுகின்றன.
பணியின் விவரம்:
1. மார்க்கெட்டிங் ஆபீசர்ஸ்
தகுதி: மார்க்கெட்டிங்/
நிதி பாடங்களில் முதுநிலை பட்டப்படிப்பை கல்லூரியில் சேர்ந்து படித்து
முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பட்டப்படிப்பில் கலை/
வணிகவியல் பாடங்களை படித்திருக்க வேண்டும். சம்பந்தப்பட்ட துறையில் 5
ஆண்டுகள் முன் அனுபவம்.
வயது: 31.12.2024 அன்று 40க்குள்.
சம்பளம்: ரூ.19,400 -
700/ 1 - 20,100 - 800/ 15 - 32,400. தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் ஓராண்டு
புரொபேஷன் காலத்திற்கு பின்னர் மேனேஜர் அந்தஸ்தில் பணியில்
அமர்த்தப்படுவார்கள்.
2. அசிஸ்டென்ட் மேனேஜர்
தகுதி:
வணிகவியல்/ வணிக மேலாண்மை/ கணிதம் ஆகிய பாடங்களில் முதல் தர தேர்ச்சியில்
முதுநிலை பட்டம். கம்ப்யூட்டர் அறிவும் பெற்றிருக்க வேண்டும். வயது:
31.12.2024 அன்று 26க்குள். மிகவும் பிற்பட்டோர் மற்றும் பிற்பட்டோருக்கு 2
ஆண்டுகளும், எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகளுக்கு 5 ஆண்டுகளும் அதிகபட்ச
வயது வரம்பில் சலுகை அளிக்கப்படும்.