எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் இன்ஜினியரிங் பதவி
எலக்ட்ரானிக்ஸ்
நிறுவனத்தில் ஒரு வருட ஒப்பந்த அடிப்படையில் எலக்ட்ரானிக்ஸ் அண்டு
மெக்கானிகல் பிரிவில் இன்ஜினியர்களைப் பணி நியமனம் செய்வதற்காக
விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
வயது:
01.01.2025 அடிப்படையில் 25 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி:
பி.இ.,
அல்லது பி.டெக்., படிப்பை முதல் வகுப்பில் எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ்
அண்டு கம்யூனிகேஷன், டெலிகம்யூனிகேஷன், எலக்ட்ரானிக்ஸ் அண்டு டெலி
கம்யூனிகேஷன், மெக்கானிகல் ஆகிய ஏதாவது ஒரு பிரிவில் அங்கீகரிக்கப்பட்ட
கல்வி நிறுவனத்தின் மூலமாக முடித்திருக்க வேண்டும்.
ஏற்கெனவே பெல் நிறுவனத்தில் அப்ரென்டிஸ்ஷிப் முடித்தவர்களும், இத்துறையில் 6 மாத பணியனுபவம் கொண்டவர்களும் விண்ணப்பிக்கலாம்.
தேர்ச்சி முறை:
எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் என்ற முறைகளில் தேர்ச்சி இருக்கும்.
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பங்களை ஆன்லைன் முறையில் சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க இறுதி நாள்: 05.02.2025
இணையதள முகவரி:
http://www.bel-india.com/sites/default/files/Advertisement-ContractEngineer-Mil.Com.SBU.pdf