மெட்ரோ ரயில் நிறுவனத்தில் வேலை
பெங்களூருவில் உள்ள மெட்ரோ ரயில் நிறுவனம் அங்குள்ள டெக்னிகல் பிரிவு காலியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது.
பிரிவுகள் மற்றும் காலியிடங்கள்:
பெங்களூரு
மெட்ரோ ரயிலில் பிட்டர் பிரிவில் 12, மெக்கானிக் - ரெப்ரிஜிரேஷன் அண்டு
ஏ.சி., பிரிவில் 5, எலக்ட்ரீசியன் பிரிவில் 8, எலக்ட்ரானிக்ஸ் மெக்கானிக்
பிரிவில் 8 டிரெய்னி இடங்களை நிரப்ப உள்ளது.
வயது வரம்பு:
பெங்களூரு
மெட்ரோ ரயில் நிறுவனத்தின் மேற்கண்ட காலியிடங்களுக்கு விண்ணப்பிப்பவர்கள்
01.10.2025 அடிப்படையில் 20 முதல் 21 வயது உடையவராக இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி:
விண்ணப்பிக்கும் பிரிவில் ஐ.டி.ஐ., படிப்பை முடித்திருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதி உடைய விண்ணப்பதாரர்கள் முழுமையாக நிரப்பப்பட்ட தங்கள் விண்ணப்பங்களைப் பின்வரும் முகவரிக்கு 15.02.2025க்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.
Principal BMR Training institute ,
S.V.Road Baiyappanhalli Depot,
Bangalore 560038
இணையதள முகவரி:
http://bmrc.co.in/pdf/careers/TRADE%20APPRENTICES.pdf