இயக்குனர் கண்டிஷனை மீறிய தனுஷ்
சென்னை:இயக்குனர் கே.வி.ஆனந்த் போட்ட கண்டிஷன மீறினார் தனுஷ்.ஷங்கர் உள்ளிட்ட சில டைரக்டர்கள் தங்கள் படத்தில் நடிக்கும் ஹீரோ, ஹீரோயின்களுக்கு கதையையோ, சீனையோ வெளியில் சொல்லக்கூடாது, படத்துக்காக போடப்பட்ட மேக்அப் ஸ்டில்லை ரிலீஸ் பண்ணக்கூடாது என்று கண்டிஷன் விதிப்பது வழக்கம். அது மட்டும் அல்ல, படத்தில் புது தோற்றத்தில் தோன்றினால் அந்த தோற்றத்துடன் மீடியாவினர் வருகை தரும் பார்ட்டி, விழாக்களில் பங்கேற்க வேண்டாம் என கடுமையான கண்டிஷனும் போடுவார்கள். அந்த பாணியில் இயக்குனர் கே.வி.ஆனந்த் தான் இயக்கும் ‘அநேகன் படத்தில் நடிக்கும் தனுஷுக்கு கண்டிஷன் போட்டார். இந்த படத்தில் 3 வித கெட்டப்பில் தனுஷ் நடிக்கிறார். அந்த தோற்றங்களுடன் பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள வேண்டாம் என்று தனுஷிடம் கூறினார். தனுஷும் அதை ஒப்புக்கொண்டார். இந்நிலையில் பட விழாக்களுக்கு வந்த அழைப்புகளை ஏற்காமல் தவிர்த்து வந்தார்.
ஆனால் சமீபத்தில் நட்சத்திர ஓட்டலில் நடந்த நைட் பார்ட்டியில் தனுஷ் கலந்துகொண்டார். அங்கு வந்த சிலர் அவருடன் நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டனர். அதில் சில படங்கள் இணைய தளங்களில் வெளியாகின. இதில் தனுஷின் புதிய தோற்றம் தெரியவந்தது. இதையறிந்து இயக்குனர் ஆனந்த் ஷாக் ஆனார். ஆனால் தனுஷிடம் இதுபற்றி எதுவும் கேட்காமல் வழக்கம்போல் ஷூட்டிங் வேலைகளில் அவர் கவனம் செலுத்தி வருவதாக பட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.