Untitled Document
Tamil Month Rasi Palan Maasi 2013
2014
02
Jan
பழைய இயக்குனர்களை ஓரம் கட்டும் ஆர்யா


சென்னை:புத்தாண்டில், ஏற்கனவே பணியாற்றிய இயக்குனர்களை தவிர்த்து புதிய இயக்குனர்களுடன் பணியாற்ற  முடிவு செய்துள்ளேன் என்றார் ஆர்யா.எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் ‘புறம்போக்கு, மகிழ் திருமேனி இயக்கத்தில் ‘மீகாமன் மற்றும் ராஜேஷ் இயக்கும் படத்தில் நடிக்கிறார் ஆர்யா.
அவர் கூறியதாவது: புத்தாண்டுக்கு என்ன தீர்மானம் எடுத்திருக்கிறீர்கள் என்கிறார்கள்.

என்னைப் பொறுத்தவரை புத்தாண்டு தீர்மானத்தில் எனக்கு நம்பிக்கை இல்லை. அப்படி ஏதாவது புதிய தீர்மானம் எடுக்கும்போது ஏற்கனவே எண்ணியிருந்த தீர்மானங்களை நடுவழியில் கைவிட வேண்டி வரும். குறுகிய கால திட்டங்களையே நான் விரும்புகிறேன். அதைத்தான் சாதிக்க முடியும். கடந்த ஆண்டு ராஜா ராணி, ஆரம்பம், இரண்டாம் உலகம் போன்ற படங்கள் எனக்கு பெரிய படங்களாக அமைந்தன. இந்த ஆண்டு ஏற்கனவே ஒப்புக்கொண்ட படங்களை தவிர்த்து புதிய இயக்குனர்களுடன் நிறைய படங்களில் நடிக்க உள்ளேன். இதனால் எனக்கு புதிய வடிவம் கிடைப்பதுடன் பணியாற்றுவதற்கு சுவாரஸ்யமாகவும் இருக்கும். எப்போதும்போல் இப்பவும் கடுமையாக உழைக்கவே விரும்புகிறேன். அப்படி இருந்தாலே எல்லாம் தன்னால் வந்து சேரும்.இவ்வாறு ஆர்யா கூறினார்.

கருத்துகளை தெரிவிக்க

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 

 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,



Follow Me
Health Corner: Current Health News, latest medical news, health news, medical news, medical dictionary, most popular news, hospital, diets, drugs, dental care, bird flu, cancer, mens health, womens health, mental health, health articles, diabetes, medical conditions, health animation, video, Free Online Medical journals, alternative medicine - Dinakaran