எடை குறைக்க ஹீரோயினுக்கு கெடுவிதித்த இயக்குனர்
சென்னை:மாஸ்டர் மகேந்திரன், சுவேதாராவ் நடிக்கும் படம் ‘என்றுமே ஆனந்தம். இப்படம் பற்றி இயக்குனர் விவேகபாரதி கூறியதாவது:
தற்கொலைக்கு முயலும் ஒரு பெண்ணை காப்பாற்றுகிறான் ஹீரோ. இறுதியில் அந்த பெண்ணுக்காக ஹீரோவே தற்கொலைக்கு முயற்சிக்கின்றான். இதன் முடிவு என்ன என்பது கிளைமாக்ஸ்.
மாஸ்டர் மகேந்திரன் ஹீரே£வாக நடிக்கிறார். சாந்தமான முகம் கொண்ட சுவேதாராவ் ஹீரோயினாக தேர்வு செய்யப்பட்டார். ஆனால் அவர் குண்டான தோற்றத்துடன் இருந்தார். அவரை அழைத்து ஷூட்டிங் தொடங்குவதற்குள் 5 கிலோவுக்கு மேல் உடை எடை குறைக்க வேண்டும் என்று 2 மாதம் அவகாசம் கொடுத்தேன். அதன்படி அவர் எடை குறைத்தபிறகே ஷூட்டிங்கில் பங்கேற்றார். விமலா ராஜநாயகம், ஜாகிர் உசேன் இணை தயாரிப்பு. கண்மணிராஜா இசை.